Published:Updated:

``வீர் சாவர்க்கர்; ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருந்தவரை தியாகி என்பதா?!" - நாராயணசாமி காட்டம்

நாராயணசாமி

”மோடி அரசுக்கு முடிவுகட்டும் காலம் வெகு தூரமில்லை. அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மோடியை விரைவில் வீழ்த்துவார்கள்.” - புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

``வீர் சாவர்க்கர்; ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருந்தவரை தியாகி என்பதா?!" - நாராயணசாமி காட்டம்

”மோடி அரசுக்கு முடிவுகட்டும் காலம் வெகு தூரமில்லை. அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மோடியை விரைவில் வீழ்த்துவார்கள்.” - புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

Published:Updated:
நாராயணசாமி

மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கையைக் கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் கவர்னர் மாளிகையை நோக்கி பேரணியாகச் சென்று முற்றுகையிடும் போராட்டம் இன்று நடந்தது. அதில் கலந்துகொண்டு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “நாட்டில் விலைவாசி விஷம்போல் உயர்ந்துவிட்டது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. இப்படியான பிரச்னைகளை முன்வைத்து காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் அறப் போராட்டம் நடத்த வேண்டும் என்று சோனியா காந்தி கட்டளையிட்டார். அதன்படி இன்று அனைத்து மாநிலங்களிலும் போராட்டம் நடக்கிறது. நாட்டில் 25 கோடிப் பேருக்கு வேலையில்லை. அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

தியாகச் சுவரில் சாவர்க்கர் பெயர் பதிக்கும் தமிழிசை
தியாகச் சுவரில் சாவர்க்கர் பெயர் பதிக்கும் தமிழிசை

அதைக் கண்டித்து நாங்கள் பலகட்டப் போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். அதைப் பற்றி மோடி அரசு கவலைப்படவில்லை. 400 ரூபாயாக இருந்த சமையல் எரிவாயு தற்போது 1,050 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. ஜி.எஸ்.டி வரி என்ற போர்வையில் அரிசி, கோதுமை, மைதா, தயிர், மோர், பால், பென்சில் ரப்பர், மருத்துவ உபகரணங்கள் என எல்லாவற்றுக்கும் வரி போட்டு விலையை உயர்த்திவிட்டார்கள். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அது பற்றிக் கேட்டால் அமலாக்கத்துறை மூலம் அரசியல் கட்சித் தலைவர்களை திட்டமிட்டுப் பழிவாங்குகிறது மோடி அரசு. விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினால் காங்கிரஸ் கட்சியினர் தங்களுடைய தலைவர்களைப் பாதுகாப்பதற்காக போராட்டம் நடத்துகின்றனர் என்று பொய்யான குற்றச்சாட்டை வைக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாட்டில் ஜனநாயகம் கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக்கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தில் மோடிக்கு நம்பிக்கை கிடையாது. அவர் ஓர் அராஜக ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார். மக்களைக் கிள்ளுக்கீரையாக நினைக்கிறார். மோடி அரசுக்கு முடிவுகட்டும் காலம் வெகு தூரமில்லை. அரசியல் கட்சித் தலைவர்களெல்லாம் ஒருங்கிணைந்து மோடியை விரைவில் வீழ்த்துவார்கள். அதற்கு முக்கியக் காரணம், மோடி அரசு மக்களை முற்றிலுமாக வஞ்சிக்கிறது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. இதனால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துகொண்டிருக்கிறது. கண்டிப்பாக இதற்கு விடிவுகாலம் வரும். வீர சாவர்க்கார் ஒருநாள் சிறையில் இருந்ததால் அவரை தியாகி என்று கவர்னர் கூறுவது விந்தையாக இருக்கிறது. அவர் சிறையில் இருக்கவில்லை என்று நான் கூறவில்லை.

ஆனால், சுதந்திரப் போராட்ட சமயத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு விசுவாசியாக இருப்பேன், பிரிட்டிஷ் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன், ஐந்து ஆண்டுகள் அரசியல் செய்ய மாட்டேன், பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போராட மாட்டேன் என்று மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்த வீர சாவர்க்கர் ஒரு தியாகியா... ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருந்தவரை தியாகியாக நான் ஏற்க மாட்டேன். கவர்னரை வரச் சொல்லுங்கள். மேடை போட்டு வீர சாவர்க்கரைப் பற்றி விவாதம் நடத்துவோம். அந்த விவாதத்தில், உண்மையிலேயே வீர சாவர்க்கர் தியாகி என்று மக்கள் ஏற்றுக்கொண்டால் நானும் ஏற்றுக்கொள்கிறேன். நாட்டுக்காகப் போராடிய தலைவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை வீர சாவர்க்கர் ஒரு கோழை சாவர்க்கர்தான்” என்றார்.