Published:Updated:

புதுச்சேரி அரசின் அனுமதி கிடைக்கவில்லை; இரண்டாவது முறையாக திரும்பிச் சென்ற சொகுசுக் கப்பல்!

சொகுசுக் கப்பல்

புதுச்சேரி அரசின் அனுமதி கிடைக்காததால் இரண்டாவது முறையாக புதுச்சேரிக்குள் நுழையாமல் திரும்பிச் சென்றது சொகுசுக் கப்பல்.

புதுச்சேரி அரசின் அனுமதி கிடைக்கவில்லை; இரண்டாவது முறையாக திரும்பிச் சென்ற சொகுசுக் கப்பல்!

புதுச்சேரி அரசின் அனுமதி கிடைக்காததால் இரண்டாவது முறையாக புதுச்சேரிக்குள் நுழையாமல் திரும்பிச் சென்றது சொகுசுக் கப்பல்.

Published:Updated:
சொகுசுக் கப்பல்

சென்னை – விசாகப்பட்டினம் - புதுச்சேரிக்கு இடையேயான தனியார் சொகுசு சுற்றுலாக் கப்பலை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சில நாள்களுக்கு முன்பு தொடங்கிவைத்தார். சென்னையிலிருந்து கிளம்பும் அந்தக் கப்பல் ஆழ்கடலுக்குச் சென்று நங்கூரமிட்டு நிற்கும். அதன் பின்னர் புதுச்சேரிக்கு வந்து உப்பளம் துறைமுகத்தில் பயணிகளை இறக்கி, அவர்கள் நகரை சுற்றிப் பார்த்த பின்பு மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு விசாகப்பட்டினம் செல்லும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

ஆனால் அந்த சொகுசுக் கப்பலில் கேசினோ எனும் சூதாட்டங்கள் இருப்பதால், அதைப் புதுச்சேரிக்குள் அனுமதிக்கக் கூடாது என்று ஆளுங்கட்சியின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக போர்க்கொடி உயர்த்தியது. அதேபோல துணைநிலை ஆளுநரான தமிழிசையும், ”கலாச்சார சீர்கேடு தொடர்பான எந்த நடவடிக்கையையும் அரசு அனுமதிக்காது. கப்பலில் சூதாட்டங்கள் ஏதும் இல்லை என்றால் மட்டும்தான் அதை அனுமதிப்போம். புதுச்சேரியில் பயணிகளை ஏற்றி, இறக்குவதற்கு அந்தக் கப்பலுக்கு அனுமதியளிக்கவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த 10-ம் தேதி புதுவை கடற்பகுதியில் சொகுசுக் கப்பல் நிறுத்தப்பட்டது. கடற்கரையிலிருந்து பொதுமக்கள் பிரமாண்ட கப்பலைக் கண்டுகளித்தனர். புதுவை அரசின் அனுமதி இல்லாததால் பயணிகளை இறக்காமல் கப்பல் அப்படியே ஆழ்கடலுக்குள் திரும்பிச் சென்றது. இதற்கிடையே, ஆழ்கடலுக்குள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த சொகுசுக் கப்பல் நேற்று அதிகாலை மீண்டும் புதுவை கடலோரப் பகுதிக்கு வந்தது. அதிலிருந்த பயணிகள் கடற்கரை சாலை, காந்தி திடல், மற்றும் புதுச்சேரியின் அழகை ரசித்தனர்.

கடல் பகுதியில் உலா வருவதற்கு மத்திய அரசின் அனுமதி பெற்றிருந்ததால், இந்த சொகுசுக் கப்பல் புதுவையை ஒட்டிய கடலோரப் பகுதியில் உலா வந்து சென்றிருக்கிறது. புதுவை அரசின் அனுமதி கிடைக்காததால் சொகுசுக் கப்பல் நிறுவனத்தினர், அடுத்த பயணத்தின்போது கடலூரில் கப்பலை நிறுத்துவதற்கும், அங்கிருந்து பயணிகளைப் பேருந்துகளில் ஏற்றி புதுவைக்கு அழைத்து வந்து சுற்றிக் காட்டுவதற்கும் நடவடிக்கை எடுத்துவருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism