Published:Updated:

``தமிழ் மீதான எங்கள் பற்று மற்றவர்களைவிடக் குறைந்தது கிடையாது!" – ஆளுநர் தமிழிசை

தமிழிசை சௌந்தரராஜன்

``மருத்துவமனைக்கு முன்பாக போராட்டம் நடத்துபவர்கள் அங்கிருக்கும் நோயாளிகளுக்கு எதிராகவும், நோயாளிகளின் நலனுக்கு எதிராகவும் நடந்துகொள்பவர்கள்." - ஆளுநர் தமிழிசை

``தமிழ் மீதான எங்கள் பற்று மற்றவர்களைவிடக் குறைந்தது கிடையாது!" – ஆளுநர் தமிழிசை

``மருத்துவமனைக்கு முன்பாக போராட்டம் நடத்துபவர்கள் அங்கிருக்கும் நோயாளிகளுக்கு எதிராகவும், நோயாளிகளின் நலனுக்கு எதிராகவும் நடந்துகொள்பவர்கள்." - ஆளுநர் தமிழிசை

Published:Updated:
தமிழிசை சௌந்தரராஜன்

இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு கொண்டாட்டங்களையொட்டி சரக்கு, சேவை வரி, மத்திய கலால் வரி ஆணைய அதிகாரிகள் கலந்துகொண்ட சைக்கிள் பேரணி புதுச்சேரி கடற்கரை சாலையில் இன்று நடைபெற்றது. அந்தப் பேரணியை கொடியசைத்து, தொடங்கிவைத்துப் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ``இந்திய சுதந்தரத்தின் 75-வது ஆண்டை நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். தற்போது புதுச்சேரி மாநிலம் வளர்ச்சிப்பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. ஜி.எஸ்.டி வரி எந்த அளவுக்கு வசூலிக்கப்படுகிறது என்பது குறித்தும், மக்களுக்கு அது எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்தப் பேரணி நடைபெறுகிறது. புதுச்சேரியில் 8,000-க்கும் மேற்பட்டவர்கள் வரி செலுத்திவருகிறார்கள் இது மேலும் அதிகரிக்கும்.

பேரணியைத் தொடன்ஃப்கி வைக்கும் ஆளுநர் தமிழிசை
பேரணியைத் தொடன்ஃப்கி வைக்கும் ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி வரலாற்றில் முதன்முறையாக இந்த ஆண்டு ரூ.600 கோடி வசூல் செய்யப்பட்டிருக்கிறது. அரசு பல நல்ல திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதாலும், மக்கள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்போடும் இந்த வளர்ச்சி கிடைத்திருக்கிறது. அதற்காக அனைவரையும் பாராட்டுகிறேன். இது மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். வரி செலுத்துவதால் அரசாங்கத்துக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் பல நல்ல திட்டங்கள் கிடைக்கும். மக்களுக்கு அந்த நல்லெண்ணத்தை ஊக்கப்படுத்துவதாக இந்த நிகழ்ச்சி இருக்கிறது. 75-வது சுதந்திர ஆண்டைக் கொண்டாடுவதற்கு எடுக்கப்படும் ஒவ்வொரு நகர்வும் இளைஞர்களுக்கு நம்முடைய சுதந்திரத்தைப் பற்றியும், அதற்கான தியாகத்தைப் பற்றியும் எடுத்துக் கூறுவதாக அமையும். அதேபோல வருங்காலத்தில் எப்படி வளர்ச்சியடைய வேண்டும் என்றும் எடுத்துக் கூறுவதாகவும் இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொடர்ந்து நடைபெறும் இந்தக் கொண்டாட்டங்கள் எத்தகைய பாடுபட்டு நாம் இந்தச் சுதந்திரத்தை பெற்றோம் என்பதைத் தொடர்ந்து நினைவுபடுத்திக்கொண்டிருக்கும். அதற்காக நம் பாரதப் பிரதமருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``ஜிப்மர் மருத்துவமனையில் இந்தித் திணிப்பு நடைபெறவில்லை. நேற்று நானே அங்கு நேரடியாக சென்று அறிக்கைகள் போன்றவற்றை ஆய்வு செய்தேன்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை

பொதுமக்களுக்குத் தரப்படும் அத்தனை அறிக்கைகளும் தகவல்களும் தமிழில்தான் இருக்கின்றன. முதலில் தமிழ் அதன் பிறகு ஆங்கிலம், இந்தி என்ற முறையில்தான் அங்கு ஆவணங்கள் இருக்கின்றன. ஆனால் மறுபடியும் மறுபடியும் பல்வேறு இயக்கங்கள் போராட்டங்களை அறிவித்துக்கொண்டிருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அது தவறான அணுகுமுறை. ஜிப்மர் மருத்துவமனைக்குப் பல்வேறு பகுதிகளிலிருந்து குறிப்பாக, தமிழகத்திலிருந்து 60-70 சதவிகிதம் மக்கள் வருகிறார்கள். ஜிப்மர் அவசர சேவை பெறக்கூடிய ஒரு மருத்துவமனை. அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவது பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும். மருத்துவமனையின் சேவை சிறப்பாக இருக்கிறது. எந்த வகையிலும் இந்தித் திணிக்கப்பட மாட்டாது என்ற உறுதிப்பாட்டை அரசு கொடுத்த பிறகும், இந்தி மொழி அறிந்தவர்களுக்காக மட்டும் கொடுக்கப்பட்ட ஒரு சுற்றறிக்கையை வைத்துக்கொண்டு இந்தி திணிக்கப்படுகிறது என்ற ஒரு செய்தி பரப்பப்படுகிறது. நான்கு சுற்றுகளில் அறிக்கை தெளிவாக இருக்கிறது. மற்றவர்களுக்கு இருக்கும் தமிழ்ப்பற்றைவிட எங்களுடைய பற்று எந்த வகையிலும் குறைந்தது கிடையாது. நான் தமிழில்தான் பதவி ஏற்றேன்.

புதுச்சேரி சரித்திரத்தில் முதன்முறையாக ஆளுநர் உரை தமிழில் வாசிக்கப்பட்டது. தமிழ்ப் பற்றில் எந்த வகையிலும் நாங்கள் குறைந்தவர்கள் அல்ல. மருத்துவமனைக்கு முன்பாக போராட்டம் நடத்துபவர்கள் அங்கிருக்கும் நோயாளிகளுக்கு எதிராகவும், நோயாளிகளின் நலனுக்கு எதிராகவும் நடந்துகொள்பவர்கள். மருத்துவர்கள் நோயாளிகளுக்குச் சிறப்பான சேவை செய்கிறார்கள். கொரோனா காலத்தில் பணியாற்றியதற்காக அவர்களுக்கு வாழ்த்து கூறாமல் இப்போது குறை சொல்கிறார்கள். மருத்துவமனையில் கலவரம் செய்யக் கூடாது. மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்துவது தவறு என்பதை அழுத்தமாக இங்கே பதிவு செய்கிறேன்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism