Published:Updated:

கொரோனா: `புதுச்சேரியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாதது ஏன்?' – ஆளுநர் தமிழிசை விளக்கம்!

ஆளுநர் தமிழிசை

``புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகம் இருந்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்பது மிகவும் ஆறுதலான செய்தி” –துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

கொரோனா: `புதுச்சேரியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாதது ஏன்?' – ஆளுநர் தமிழிசை விளக்கம்!

``புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகம் இருந்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்பது மிகவும் ஆறுதலான செய்தி” –துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

Published:Updated:
ஆளுநர் தமிழிசை

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு துணைநிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி, இலாசுப்பேட்டையில் உள்ள அவரின் சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர், ``புதுச்சேரி அரசு சார்பில் சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுக்கு மரியாதை செலுத்துவதில் பெருமை அடைகிறேன். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது சிலை தில்லியில் நிறுவப்பட இருக்கிறது.

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

இது நமக்கெல்லாம் பெருமை சேர்ப்பதாக அமையும். சுபாஷ் சந்திரபோஸ் சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டதன் விளைவாக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார். அவரைப் பின்பற்றி இளைஞர்கள் நினைத்ததை தீவிரமாக செயலாற்றி வெற்றி பெற வேண்டும் என்பதைத்தான் பிரதமர் சொல்லி வருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொரோனா சூழலில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் இருப்பதைப்போலவே புதுச்சேரியிலும் தொற்று அதிகரித்திருக்கிறது. புதுச்சேரியில், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தளர்வுகளோடு கூடிய அடைப்பு அறிவிக்கப்பட்டது. பிற மாநிலங்களில் முழு அடைப்பு இருக்கிறது. மக்கள் பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்தால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதற்காகதான் புதுச்சேரியில் தளர்வுகளோடு கூடிய அடைப்பு அறிவிக்கப்பட்டது.

கொரோனா - ஊரடங்கு
கொரோனா - ஊரடங்கு

மக்கள் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்ற கோரிக்கையோடு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. நோய்த் தொற்று அதிகம் இருந்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்பது மிகவும் ஆறுதலான செய்தி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், இணை நோய் உள்ளவர்களுக்கு மட்டுமே மரணம் ஏற்பட்டிருக்கிறது. புதுச்சேரி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் புதுச்சேரி அரசு எடுத்து வருகிறது. ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் சிரமங்கள் இருப்பதாக அறிந்து அதிகாரிகளுடன் பேசினேன். ஜிப்மர் இயக்குநர் மற்றும் நிர்வாகிகள் என்னை நேற்று சந்தித்து விளக்கம் அளித்தார்கள். 60 சதவிகிதத்திற்கும் மேலான மருத்துவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் அதனால் சாதாரண அறிகுறிகளோடு வரும் நோயாளிகளை முழுமையாக கவனிக்க இயலவில்லை என்றும் தெரிவித்தார்கள்.

எத்தகைய சூழ்நிலையிலும் நோயாளிகள் பாதிப்பு அடையாத வகையில் மருத்துவச் சேவையை தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவர்களும் உறுதி அளித்திருக்கிறார்கள். அதனால், அவசர சிகிச்சையும் அவசியமான சிகிச்சையும் ஜிப்மர் மருத்துவமனையிலும் மற்றும் புதுச்சேரியில் உள்ள பிற மருத்துவமனைகளிலும் மறுக்கப் படாது என்று தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism