Published:Updated:

``புதுச்சேரி அரசு அனுமதிக்காது!” – தமிழக அரசின் சுற்றுலா கப்பல் குறித்து தமிழிசை கூறுவதென்ன?

தமிழிசை சௌந்தரராஜன்

``தமிழக அரசின் சுற்றுலா கப்பல் குறித்த எந்தத் தகவலும் புதுச்சேரி அரசுக்கு வரவில்லை.” – துணைநிலை ஆளுநர் தமிழிசை

``புதுச்சேரி அரசு அனுமதிக்காது!” – தமிழக அரசின் சுற்றுலா கப்பல் குறித்து தமிழிசை கூறுவதென்ன?

``தமிழக அரசின் சுற்றுலா கப்பல் குறித்த எந்தத் தகவலும் புதுச்சேரி அரசுக்கு வரவில்லை.” – துணைநிலை ஆளுநர் தமிழிசை

Published:Updated:
தமிழிசை சௌந்தரராஜன்

சென்னையிலிருந்து புதுச்சேரிக்கும், விசாகப்பட்டினத்துக்கும் செல்லும் 796 அறைகளைக்கொண்ட சுற்றுலா சொகுசுக் கப்பல் போக்குவரத்தை இரண்டு நாள்களுக்கு முன்பு தொடங்கிவைத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இந்நிலையில் நேற்று புதுச்சேரியில் தேசிய மாணவர் படை இயக்குநரகம் சார்பில் கடற்படைப் பிரிவு மாணவர்களின், கடல் சாகசப் பயணம் தொடங்கியது. புதுச்சேரி தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து தொடங்கிய மாணவர்கள் கடல் சாகசப் படகுப் பயணத்தை புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். கடற்படை, தேசிய மாணவர் படை அதிகாரிகள், கடல் சாகசக்குழுவினர் கலந்துகொண்ட இந்தக் கடல் சாகசப் பயணத்தில், புதுச்சேரி, தமிழகத்தைச் சேர்ந்த தேர்வுசெய்யப்பட்ட 60 மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு படகில் பயணத்தைத் தொடங்கினர்.

சுற்றுலா கப்பல்
சுற்றுலா கப்பல்

கடலில் 300 கிலோமீட்டர் பயணிக்கும் இந்தக்குழு புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்குச் சென்று மீண்டும் புதுச்சேரிக்கு திரும்பும். இந்தப் பயணத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. தொடக்கவிழா நிகழ்வுகளுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ``கடல் சாகசப் பயணத்தில் கலந்துகொள்ளும் மாணவர்கள், கடல் பயணம் செல்வது மட்டுமல்லாமல், கடலோர கிராமங்களில் சமூக விழிப்புணர்வையும் ஏற்படுத்தவிருக்கிறார்கள். அந்த வகையில் ரத்த தான முகாமில் கலந்துகொள்ளுதல், மரங்கள் நடுதல், கடற்கரையைத் தூய்மைப்படுத்துதல், விழிப்புணர்வு பேரணிகள் நடத்துதல் போன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபடவுள்ளனர் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், இந்தக் கடல் பயணக்குழவில் 25-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொள்வதும் மகிழ்ச்சி. பெண்களுக்கு அவர்கள் முன்னுதாரணமாக உள்ளனர். 25 பெண்கள் 20 நாள்களுக்கும் மேல் கடற்பயணம் செய்யும்போது, பல்வேறு சவால்களைச் சந்திக்க வேண்டும். அதிக பாதுகாப்பும் தேவைப்படும். மாணவர்களுக்கு நமது கடற்படை உறுதுணையாக உள்ளது. குடியரசு தினத்தில் பிரதமரின் கரங்களால் வழங்கப்படும் சிறந்த அணிவகுப்புக்கான கோப்பையை, புதுச்சேரி கடற்படைப் பிரிவு பெற்றுவருவது மகிழ்ச்சியளிக்கிறது. புதுச்சேரியில் ஒரு முறை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருள்கள் தடைசெய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும், கடந்த சில தினங்களாக பொது இடங்களில் பல லட்சம் எண்ணிக்கையில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை அப்புறப்படுத்திவருகிறோம்.

பிளாஸ்டிக் பூமிக்கு மிகவும் பாரமாக இருக்கிறது. சுற்றுச்சூழல் தினத்தைக் கொண்டாடும் நிலையில், பிளாஸ்டிக் இல்லாத உலகமே வருங்கால சந்ததியினருக்கு நாம் அளிக்கும் ஆரோக்கியமான பரிசாக இருக்கும். அது தொடர்பாகவும், இந்த மாணவர்கள் குழு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்றவரிடம் “சென்னை-புதுச்சேரி இடையேயான சொகுசு சுற்றுலா கப்பலை தமிழக அரசு தொடங்கியிருக்கிறது. அதில் சூதாட்டம் உள்ளிட்ட கலாசார சீரழிவுகள் நடப்பதாகப் புகார்கள் எழுந்து வருகின்றனவே?” என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ``புதுச்சேரி அரசுக்கு அது தொடர்பாக எந்தத் தகவலும் வரவில்லை. அது தொடர்பான கோப்புகளும் வரவில்லை. அப்படியே அந்தக் கப்பல் புதுச்சேரிக்கு வந்தாலும், கலாசாரச் சீர்கேடு தொடர்பான எந்த நடவடிக்கையையும் புதுச்சேரி அரசு அனுமதிக்காது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism