Published:Updated:

`தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களைக் கட்டாய விடுப்பில் அனுப்புங்கள்!’ - புதுச்சேரி சுகாதாரத்துறை

கொரோனா தடுப்பூசி
News
கொரோனா தடுப்பூசி

`இரண்டு கொரோனா தடுப்பூசிகளைப் போடாமல் இருக்கும் ஊழியர்கள் அனைவரையும் சமரசமின்றி கட்டாய விடுப்பில் அனுப்புங்கள்’ என்று அரசு நிறுவனங்களுக்கு அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது புதுச்சேரி சுகாதாரத்துறை.

நாடு முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், கொரோனா தடுப்பு விதிமுறைகளைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டுமென்று மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளை எச்சரித்திருக்கிறது மத்திய அரசு. அதையடுத்து தொற்றுப் பரவலின் தன்மைக்கு ஏற்றவாறு கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்திவருகின்றன மாநில அரசுகள். அதேபோல நீதிமன்றங்களில் நேரடி வழக்கு விசாரணைகளை ரத்துசெய்த சென்னை உயர் நீதிமன்றம், வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் விசாரிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறது. பல மாநிலங்களில் இரவு மற்றும் பகுதி நேர ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுவருகின்றன.

புதுச்சேரி
புதுச்சேரி

புதுச்சேரியில் இரண்டு பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானதையடுத்து அங்கு மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல மருத்துவமனைகளில் படுக்கைகள், பிராணவாயு படுக்கைகள், வென்டிலேட்டர்கள், மருந்துகள் ஆகியவற்றைத் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ``மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களைத் தயார்படுத்த வேண்டும். மக்கள் கூடும் இடங்களில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். திரையரங்குகள், கடைவீதிகள், பேருந்துகள், கலையரங்கங்கள் ஆகியவற்றில் 50% மட்டும் அனுமதிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்நிலையில்தான், ``கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொள்ளாத அரசு ஊழியர்களைக் கட்டாய விடுப்பில் அனுப்புங்கள்” என்று உத்தரவிட்டிருக்கிறது புதுச்சேரி சுகாதாரத்துறை. இது தொடர்பாக அனைத்து அரசுத் துறைகளுக்கும் சுகாதாரத்துறை அனுப்பியிருக்கும் அந்த அறிக்கையில், ``மத்திய உள்துறை அமைச்சகத்தின் அரசாணையின்படி புதுச்சேரியின் அனைத்து நிர்வாகச் செயலர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் தங்களுக்குக் கீழே பணிபுரியும் வயது தகுதியுள்ள பணியாளர்கள் தடுப்பூசி போட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொள்ளாத அனைத்துத் துறை அரசு ஊழியர்களையும் கட்டாய விடுப்பில் அனுப்ப வேண்டும்’’ என சுகாதாரத்துறை உத்தரவிட்டிருக்கிறது. அதேபோல ஒப்பந்த ஊழியர்களையும் சம்பளம் இல்லாமல் கட்டாய விடுப்பில் அனுப்ப வேண்டும் என்றும், 07.01.2022 தேதிக்குள் 100% தடுப்பூசி என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறது. அதேபோல அரசு அலுவலக வளாகத்தில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறது.