Published:Updated:

``நான் இரும்புப் பெண்மணி, என்னை வாயில் போட்டு மெல்ல முடியாது!" – தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்

தமிழிசை சௌந்தரராஜன்

”நான் துணைநிலை ஆளுநர் பொறுப்பு வகிப்பதில் இவர்களுக்கு என்ன கஷ்டம் ? தமிழகத்தைச் சேர்ந்தவர் இரண்டு மாநிலங்களுக்கு பொறுப்பாக இருந்து செயல்படுவதில் இவர்களுக்கு என்ன பிரச்னை ?” - தமிழிசை சௌந்தரராஜன்

``நான் இரும்புப் பெண்மணி, என்னை வாயில் போட்டு மெல்ல முடியாது!" – தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்

”நான் துணைநிலை ஆளுநர் பொறுப்பு வகிப்பதில் இவர்களுக்கு என்ன கஷ்டம் ? தமிழகத்தைச் சேர்ந்தவர் இரண்டு மாநிலங்களுக்கு பொறுப்பாக இருந்து செயல்படுவதில் இவர்களுக்கு என்ன பிரச்னை ?” - தமிழிசை சௌந்தரராஜன்

Published:Updated:
தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நேற்று மாலை “சித்திரை முழு நிலவொளியில் கூடுவோம் விருந்துண்போம். தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடுவோம்" என்ற தலைப்பில் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சியும், தேநீர் விருந்தும் நடைபெற்றது. கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். அதேசமயம் கவர்னர் கொடுத்த அந்த தேநீர் விருந்தை மதச்சார்பற்ற கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ், தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன.

தேநீர் விருந்தில் கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி
தேநீர் விருந்தில் கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி

அந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், ``சித்திரை முழு நிலவில் கூடி கூட்டாஞ்சோறு உண்கிற பழக்கம் இருந்தது. பழமையான தமிழ் பழக்க வழக்கங்களை நாம் மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்வை கொண்டாடுகிறோம். தமிழ் எல்லா இடங்களிலும் ஒலிக்க வேண்டும். தமிழர்களின் பெருமை எல்லாவிதத்திலும் நிலை நிறுத்தப்பட வேண்டும். எனது அன்பான அழைப்பில் அரசியலை கலப்பது நமது தமிழ் பண்பாட்டுக்கு உகந்தது அல்ல. நான் ஒரு சகோதரியாக, தமிழர் விழாவை கொண்டாட அழைப்பு விடுத்தேன். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதிகாரத்தை நான் கையில் எடுத்துள்ளதாக சிலர் போராடுகிறார்கள். எந்தவிதத்திலும் நான் அதிகாரத்தை பயன்படுத்தியது இல்லை. முதல்வரிடமே அதை நீங்கள் கேட்கலாம். அவர் சுதந்திரமாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தமிழர் என்ற முறையில் அனைவரும் ஒன்றிணைவோம். என்னை பொறுத்தவரை நான் பாரபட்சமாக நடந்துகொள்ளவில்லை. தெலுங்கானா, புதுச்சேரி இரண்டு மாநிலங்களையும் போற்ற வேண்டும் என்பதற்காகத்தான் கடினமாக உழைத்து வருகிறேன். இந்திய கம்யூனிஸ்ட் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் புதுச்சேரியில் இருக்கிறாரா? புதுச்சேரியைப்பற்றி அவருக்கு என்ன தெரியும்? நான் சூப்பர் முதல்வர் இல்லை. ஆனால் சூப்பராக செயல்படுகிறேன்.

நான் ஆளுநராக பதவியேற்றதில் இருந்து பா.ஜ.க தலைவர்களையே பார்ப்பதில்லை. நான் துணைநிலை ஆளுநர் பொறுப்பு வகிப்பதில் இவர்களுக்கு என்ன கஷ்டம்? தமிழகத்தைச் சேர்ந்தவர் இரண்டு மாநிலங்களுக்கு பொறுப்பாக இருந்து செயல்படுவதில் இவர்களுக்கு என்ன பிரச்னை? திறமையின் அடிப்படையில்தான் எனக்கு இந்த பொறுப்பை கொடுத்துள்ளனர். எனக்கு நிர்வாக திறமை இல்லை என்று சொல்ல முடியுமா? எனக்கு என்ன திறமை இல்லை என்பது குறித்து நான் விவாதிக்க தயார். எந்த மாநிலத்திலும் பிரச்னை இல்லாமல் செயல்பட்டு வருகிறோம். புதுச்சேரிக்கு வந்து எதையாவது சொல்ல வேண்டும் என்று சொல்கின்றனர். தமிழிசை இரும்புப் பெண்மணி. அதனால் என்னை வாயில் போட்டு மெல்ல முடியாது. இரண்டு மாநிலங்களையும் தாய்மை உள்ளத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறேனே தவிர அதிகார உணர்வுடன் பார்க்கவில்லை” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism