Published:Updated:

புதுச்சேரி: `எம்.பி-களுக்காக வீணடிக்கப்பட்ட வரிப்பணம்!’ - மத்திய உள்துறை, ஆளுநருக்குப் பறந்த புகார்

புதுச்சேரி அரசு

புதுச்சேரியில் எம்.பி-யாகத் தேர்வு செய்யப்படுபவர்கள் தங்களின் விருப்பங்களுக்கு ஏற்ப அலுவலகங்களை அமைத்துக்கொள்வதற்காக லட்சக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பது தகவல் அறிவும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்திருக்கிறது.

புதுச்சேரி: `எம்.பி-களுக்காக வீணடிக்கப்பட்ட வரிப்பணம்!’ - மத்திய உள்துறை, ஆளுநருக்குப் பறந்த புகார்

புதுச்சேரியில் எம்.பி-யாகத் தேர்வு செய்யப்படுபவர்கள் தங்களின் விருப்பங்களுக்கு ஏற்ப அலுவலகங்களை அமைத்துக்கொள்வதற்காக லட்சக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பது தகவல் அறிவும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்திருக்கிறது.

Published:Updated:
புதுச்சேரி அரசு

புதுச்சேரி ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ரகுபதி, மத்திய உள்துறை மற்றும் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் அலுவலகத்துக்கு அனுப்பியிருக்கும் புகார்க் கடிதத்தில், ``புதுச்சேரியில் மறைந்த ப.சண்முகம், எம்.ஓ.ஹெச்.பாரூக் போன்றவர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக நாடாளுமன்ற மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர்களாக இருந்தவர்கள்.

புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி

ஆனால் அவர்கள் புதுச்சேரி அரசின் நிதியை லட்சக்கணக்கில் செலவு செய்து தங்களுக்கென தனியாக அலுவலகம் அமைத்துக்கொள்ளவில்லை. ஏற்கெனவே இருந்த அரசுக் கட்டடங்களைப் பயன்படுத்திக்கொண்டார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால் முன்னாள் முதல்வர் நாராயணசாமி மத்திய இணை அமைச்சராக இருந்த காலகட்டம் முழுவதும் (08.11.2009 – 31.03.2014) நகராட்சிக்குச் சொந்தமான கம்பன் கலையரங்கத்தின் மாடியை ரூ.58.84/- லட்சம் செலவு செய்து தனது அலுவலகமாகப் பயன்படுத்திக்கொண்டார். அதுமட்டுமின்றி அந்த அலுவலகச் செயல்பாட்டுக்காக 2,66,037/- லட்சம் ரூபாயை புதுச்சேரி நகராட்சி கட்டியிருக்கிறது.

புதுச்சேரி முன்னாள் ராஜ்யசபா எம்.பி ப.கண்ணன்
புதுச்சேரி முன்னாள் ராஜ்யசபா எம்.பி ப.கண்ணன்

அதேபோல 19.10.2009 முதல் 31.05.2013 வரை ராஜ்யசபா எம்.பி-யாகப் பதவி வகித்த ப.கண்ணன், 1,000 சதுர அடியைக்கொண்ட பிப்டிக் மாடியை ரூ.7,49,700/- லட்சம் செலவு செய்து அலுவலகமாகப் பயன்படுத்திக்கொண்டார். இவர்களுக்குப் பிறகு நாடாளுமன்ற மற்றும் மக்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட யாரும் அரசின் செலவில் தனியாக அலுவலகம் அமைத்துக்கொள்ளவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் வைத்திலிங்கம், சட்டப்பேரவையை ஒட்டியிருக்கும் இடத்தை ரூ.17,92,428/- லட்சம் ரூபாய் செலவில் புனரமைத்து தனது அலுவலமாக மாற்றிக்கொண்டிருக்கிறார். புதுச்சேரி கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சூழலில், ஏற்கெனவே சீரமைக்கப்பட்டிருக்கும் ஏதேனும் ஓர் அரசுக் கட்டடத்தை அலுவலகமாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் அரசு நிதியை பல லட்சங்கள் விரயம் செய்து அலுவலகத்தை அமைத்திருக்கிறார். அவரின் பதவிக் காலம் இன்னும் மூன்று ஆண்டுகள்கூட இல்லாத நிலையில், மக்களின் வரிப்பணத்தை இத்தனை லட்சங்கள் செலவு செய்து தனியே அலுவலகம் கட்டவேண்டிய அவசியம் என்ன ?

புதுச்சேரியின் எம்.பி-யாகத் தேர்வு செய்யப்படுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கென்று தனியாக ஒரு கட்டடம் கட்டியிருந்தாலும்கூட இத்தனை லட்சங்கள் செலவாகியிருக்காது. அதனால் இனிவரும் காலங்களில் புதுச்சேரியின் நாடாளுமன்ற மற்றும் மக்களவை எம்.பி-க்கள் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப மக்களின் வரிப்பணத்தை வீணடித்து, தனியாக அலுவலகங்களை அமைப்பதைத் தடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism