Published:Updated:

`தெலங்கானா ஆளுநராகத் தமிழிசை நியமிக்கப்பட்டது சட்டவிரோதம்!' - நாராயணசாமி

ஜெ.முருகன்

தெலங்கானா ஆளுநராகத் தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை நியமிக்கப்பட்டது சட்டவிரோதம் எனப் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

Narayanasamy
Narayanasamy

தமிழக பா.ஜ.க தலைவராக 2014-ம் ஆண்டு முதல் இருந்துவந்த தமிழிசை, தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதன்மூலம் புதிதாக உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். இதையடுத்து, பா.ஜ.க தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து அவருக்குத் தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், தமிழிசையின் நியமனம் சட்டவிரோதம் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.

ஐந்து மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்கள் - தெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமனம்!
tamilisai
tamilisai

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி புகழ்பெற்ற ஸ்ரீமணக்குள விநாயகரைத் தரிசிக்க வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த நாராயணசாமி, ``அரசியல் கட்சிகள் மற்றும் அதன் பொறுப்புகளில் இருப்பவர்களைச் சேர்ந்தவர்களை ஆளுநர் மற்றும் துணைநிலை ஆளுநராக நியமிக்கக் கூடாது என சர்க்காரியா கமிஷனில் தெளிவாகக் கூறப்பட்டு இருக்கிறது.

`மருத்துவ அணிச் செயலாளர் முதல் தெலங்கானா ஆளுநர் வரை...!' - தமிழிசை கடந்துவந்த பாதை

அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களைக் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஆளுநராக நியமித்ததே இல்லை என நாங்கள் கூறவில்லை. ஆனால், அப்பட்டமாக ஆர்.எஸ்.எஸ் இயக்கம் மற்றும் பா.ஜ.க-வை சேர்ந்தவர்களுக்கு ஆளுநர் பதவி அளித்திருப்பது ஜனநாயகம், சர்க்காரியா கமிஷன் போன்றவைக்கு மட்டுமல்ல இந்திய அரசியல் சட்டத்துக்கே எதிரானது.

Narayanasamy
Narayanasamy

ஆளுநர் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் மத்திய அரசின் கைப்பாவைகளாகச் செயல்படுகிறார்கள். இருப்பினும். தமிழகத்தைச் சேர்ந்த தமிழசை சௌந்தராஜனுக்கு ஆளுநர் பதவி கிடைத்திருப்பது மகிழ்ச்சி. அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.