Published:Updated:

`106 நாள்கள் ஏன் சிறைவைக்கப்பட்டார் சிதம்பரம்?!' - கட்சி அலுவலகத்தில் கொதித்த முதல்வர் நாராயணசாமி

முதல்வர் நாராயணசாமி
முதல்வர் நாராயணசாமி

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்திருப்பதன் மூலம் அங்கு பா.ஜ.க-வின் வீழ்ச்சி ஆரம்பமாகியிருக்கிறது என்கிறார், முதல்வர் நாராயணசாமி.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் நாராயணசாமி, `` மத்தியில் இருக்கும் பா.ஜ.க அரசு ஒரே மதம், ஒரே மொழி, ஒரே ரேஷன் கார்டு என்ற கோஷத்தை முன்னெடுத்து செயல்பட்டுவருகிறது. அந்த வகையில் கொண்டுவரப்பட்டதுதான் குடியுரிமைச் சட்டம்.

மோடி - அமித்ஷா
மோடி - அமித்ஷா

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலி ருந்து தூக்கி எறியப்பட்ட காரணத்தால் இந்தியா வந்தவர்கள், பார்சி, சீக்கிய, புத்த மதத்தினர். அவர்களுக்கு இருக்கும் இந்தியக் குடியுரிமை, இஸ்லாமியர்களுக்கு மறுக்கப்படுகிறது. இதை, அம்பேத்கரின் அரசியல் அமைப்பு சட்டத்தின் ஆணிவேரை அறுக்கும் செயலாகத்தான் பார்க்கிறோம்.

பா.ஜ.க அரசை எதிர்த்துப் பேசுபவர்கள், எழுதுபவர்கள், விமர்சனம் செய்பவர்கள் என அனைவர் மீதும் வழக்கு போடப்பட்டு சிறைக்கு அனுப்புகின்றனர். என்னைப்போன்றே ப.சிதம்பரமும் வாய்த் துடுக்கோடு மத்திய அரசின் செயல்பாடுகளை எதிர்த்துவந்தார். மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால், பொருளாதார வளர்ச்சி சரிந்துள்ளதை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறினார்.

சோனியா காந்தி - ராகுல்காந்தி
சோனியா காந்தி - ராகுல்காந்தி

அதனால்தான், அவர் 106 நாள்கள் சிறையில் வைக்கப்பட்டி ருந்தார். மத்திய அரசின் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதத்திலிருந்து நான்கரை சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. வெங்காயமும் பூண்டும் உடல் நலத்துக்கு நல்லது. அதை நாம் அதிகம் சாப்பிட வேண்டும். நான் சிறைக்குச் செல்வது குறித்து கவலையில்லை. மக்களைத் திசைதிருப்பும் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷா-வும் கனவு உலகில் பறக்கின்றனர் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருக்கிறார். இது நூற்றுக்கு நூறு உண்மை. புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி, இந்த அரசை நன்றாகச் செயல்பட்டுவிடகூடாது என்ற நோக்கத்தில் இருக்கிறார். பட்டியலின மாணவர்கள் இலவசமாகக் கல்வி பயில, புதுச்சேரி அரசின் வருவாயிலிருந்து நிதி கொடுக்க அரசு முடிவுசெய்தது. அதைத் தடுப்பதற்கு கிரண்பேடி யார்?

சிதம்பரம்
சிதம்பரம்
ANI

அதிகாரிகளை அழைத்து கூட்டம் போடும் அதிகாரத்தை அவருக்குக் கொடுத்தது யார்? அதிகாரிகளுக்கு முதுகெலும்பு இல்லை. நீதிமன்றத் தீர்ப்பை கவர்னருக்கு படித்துக்காட்ட வேண்டும். இது தொடர்பாக தலைமைச் செயலர், செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் முதல்வர், அமைச்சர்களின் உத்தரவை கேட்டுத்தான் செயல்பட வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்டி, `கவர்னரின் கூட்டத்தில் பங்கேற்கவேண்டிய அவசியமில்லை' என அதிகாரிகளுக்கு எழுத்துப்பட ஓர் உத்தரவு அனுப்பியுள்ளேன்.

கவர்னரின் இச்செயலுக்கு, வரும் 11-ம் தேதி நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்பின் மூலம் விடிவுகாலம் பிறக்கும். ஏனென்றால், டெல்லி முதல்வர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றமே, `கவர்னருக்கு தனியாக அதிகாரமில்லை' என்று கூறி தீர்ப்பு அளித்துள்ளது.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்திருப்பதன் மூலம், அங்கு பா.ஜ.க-வின் வீழ்ச்சி ஆரம்பமாகியிருக்கிறது. மோடியின் செல்வாக்கும் குறைந்துவிட்டது. சோனியாவும் ராகுலும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு