Published:Updated:

`சசிகலாவை பிளாக் மெயில் செய்கிறார் தினகரன்!' - `பெங்களூரு' புகழேந்தி

புகழேந்தி
புகழேந்தி

``டி.டி.வி.தினகரன் சசிகலாவை பிளாக் மெயில் செய்கிறார். சிறையில் சசிகலாவை யாரையும் சந்திக்கவிடுவதில்லை''.

அ.தி.மு.க-வைச் சேர்ந்த பெங்களூர் புகழேந்தி கோவை சவுரிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசிய அவர், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனைக் கடுமையாக விமர்சித்தார். அவர் கூறுகையில், ``தமிழக முதல்வர், துணை முதல்வர் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. கட்சி என்ற பெயரில் டி.டி.வி தினகரன் செய்கிற காமெடிக்கு அளவே இல்லை. சின்னம் இல்லாமல் அலைந்துகொண்டிருக்கிறார்.

புகழேந்தி
புகழேந்தி

ஆர்.கே. நகரில் 20 ரூபாய் நோட்டு வழங்கியதற்கு, அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும். தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் பெயரைச் சொல்லி ஓட்டு வாங்க முடியாது. நடிகர் ரஜினி புரிந்து பேசுவதாகத் தெரியவில்லை.

அவருக்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை. எழுச்சி புரட்சி ஏற்படும் என்கிறார். 1965-ல் மொழிக்காக உயிரை விட்ட போராட்டம் தமிழகத்தில்தான் நடைபெற்றது. தொழிலாளர்களுக்காக ரஷ்யா, ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் போராட்டம் நடந்தது. ஆனால், மொழிக்காக ஒரு போராட்டம் இங்குதான் நடந்தது. இப்போது ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தது.

ரஜினி
ரஜினி

இதுதான் எழுச்சி, புரட்சி. ரஜினி எந்த எழுச்சியைக் கூறுகிறார் என்பது தெரியவில்லை. கட்சி வேறு, ஆட்சி வேறு என்கிறார். இரண்டும் வேறு வேறு இல்லை. நகமும் சதையும்போல கண்ணின் இமைபோல இருப்பதுதான் ஆட்சியும், கட்சியும். ரஜினி தெரிந்துதான் பேசுகிறாரா?

சசிகலா சிறையில் இருந்து வந்தால் எந்த மாற்றமும் நடக்காது. சிறையில் இருந்து வெளிவரும் சசிகலா, அரசியலுக்கு வரமாட்டார். நேராக வீட்டுக்குப் போவார். டி.டி.வி.தினகரன் சசிகலாவை பிளாக் மெயில் செய்கிறார். சிறையில் உள்ள சசிகலாவை யாரையும் சந்திக்கவிடுவதில்லை.

சசிகலா
சசிகலா

டி.டி.வி.தினகரன் ஒரு ஃபிராடு. சசிகலாவின் பணத்தை கொள்ளையடிக்க டிராமா செய்து வருகிறார். அவர்கள் ஒருவருக்கு கூட சசிகலாவை வெளியே அழைத்துவரும் எண்ணமில்லை. டி.டி.வி தினகரன் ஒரு பசுந்தோல் போர்த்திய புலி.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை அரசுடமை ஆக்க வேண்டும். அந்தச் சொத்துகள் மக்களுக்குத்தான் போய்ச் சேர வேண்டும். அதை வேறு யாரும் அனுபவிக்க விட மாட்டேன். அதற்கு இந்த அரசு உதவும் என்று நம்புகிறேன். தமிழக அரசியலில் டி.டி.வி தினகரன் ஒரு கொரோனா வைரஸ். அவருடன் எந்தக் கட்சியும் கூட்டணி அமைக்காது.

டி.டி.வி தினகரன்
டி.டி.வி தினகரன்

தினகரன் ரூ.20,000 கோடி வைத்திருக்கிறார். கஜா புயலின்போது தனது சொந்த மாவட்டமான தஞ்சை மக்களுக்கு குறைந்தது 500 வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கலாம். மக்களுக்காக எந்த ஒரு நல்லதையும் செய்யாத கூட்டம் அது" என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு