Published:Updated:

ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ-வைக் கன்னத்தில் அறைந்த கணவர்... வெளியான வீடியோ; பஞ்சாப்பில் பரபரப்பு

பெண் எம்எல்ஏ-வை அறைந்த கணவர் ( ட்விட்டர் )

ஆம் ஆத்மி கட்சியின் பெண் எம்.எல்.ஏ-வை அவருடைய கணவர் கன்னத்தில் அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பேசுபொருளாக மாறியிருக்கிறது.

பஞ்சாப் மாநிலத்தில் பக்வந்த் மான் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவருகிறது. பஞ்சாப்பில் தல்வாண்டி சமோ தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் பல்ஜிந்தர் கௌர். இவருடைய கணவர் சுக்ராஜ் சிங் ஆம் ஆத்மி கட்சியில் மஜா பிராந்தியத்தின் இளைஞர் பிரிவு அமைப்பாளராக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் வீட்டின் அருகேயுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காணொளியில் எம்.எல்.ஏ பல்ஜிந்தர் கௌரை அவருடைய கணவர் அறையும் காட்சி பதிவாகியிருக்கிறது. அந்த வீடியோ பதிவில், பல்ஜிந்தர் கௌர் தன்னுடைய கணவருடன் வாக்குவாதம் செய்கிறார். ஒரு கட்டத்தில், ஆத்திரமடைந்த கணவர் எழுந்து, பல்ஜிந்தர் கௌரின் கன்னத்தில் பளாரென அறைகிறார்.

பெண் எம்.எல்.ஏ பொதுவெளியில் தாக்கப்படும் காட்சி இணையத்தில் வைரலானது. இதையடுத்து, எம்.எல்.ஏ கணவரின் செயலுக்குப் பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்துவருகின்றன. பல்ஜிந்தர் கௌர் கணவர் தாக்கியது குறித்து போலீஸில் புகார் அளிக்கவில்லை. இதற்கிடையில், பஞ்சாப் மாநில மகளிர் ஆணையத் தலைவர் மனிஷா குலாட்டி, இந்த வீடியோவைப் பார்த்து, தாமாக முன்வந்து விசாரிக்க முடிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.