Published:Updated:

``காங்கிரஸ் தனக்கான கல்லறையைத் தானே தோண்டிக்கொண்டது" - அமரீந்தர் சிங் காட்டம்

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்

`கட்சியின் வெட்கக்கேடான தோல்விக்கு காந்திகளே முழுக் காரணம். நாடு முழுவதும் உள்ள மக்கள் காந்திகளின் தலைமையின் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர்.' - அமரீந்தர் சிங்

``காங்கிரஸ் தனக்கான கல்லறையைத் தானே தோண்டிக்கொண்டது" - அமரீந்தர் சிங் காட்டம்

`கட்சியின் வெட்கக்கேடான தோல்விக்கு காந்திகளே முழுக் காரணம். நாடு முழுவதும் உள்ள மக்கள் காந்திகளின் தலைமையின் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர்.' - அமரீந்தர் சிங்

Published:Updated:
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அனைத்து மாநிலங்களிலும் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. அதிலும் பஞ்சாப்பில் காங்கிரஸ் ஏற்கெனவே ஆட்சியிலிருந்தும் இந்த தேர்தலில் வெறும் 18 இடங்களை மட்டுமே பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளத் தவறியது. அதுமட்டுமல்லாமல், பஞ்சாப்பில் காங்கிரஸின் இத்தகைய தோல்விக்கு, முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் கடைசி நேரத்தில் காங்கிரஸிலிருந்து விலகியதே காரணம் என அமரீந்தர் சிங்கை பல காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்து வந்தனர். இதற்குப் பதிலளிக்கும் விதமாக அமரீந்தர் சிங், ``தோல்வியிலிருந்து காங்கிரஸ் தலைமை ஒருபோதும் கற்றுக்கொள்ளாது" என முன்னதாக காங்கிரஸைச் சாடியிருந்தார்.

காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம்
காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம்

இந்த நிலையில், அமரீந்தர் சிங் மீண்டும் காங்கிரஸைச் சாடியிருக்கிறார். இது தொடர்பாகப் பேசிய அவர், ``காங்கிரஸ் பஞ்சாப்பில் மட்டுமல்ல, உ.பி., உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தோல்வியடைந்துள்ளது, மேலும் கட்சியின் வெட்கக்கேடான தோல்விக்கு காந்திகளே முழுக் காரணம். நாடு முழுவதும் உள்ள மக்கள் காந்திகளின் தலைமையின் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். காங்கிரஸ் என்று... நவ்ஜோத் சித்து போன்ற நிலையற்ற நபருக்கு ஆதரவளிக்க முடிவு செய்ததோ, சரண்ஜித் சிங் சன்னி போன்ற ஊழல்வாதியை முதல்வராக முடிவு செய்ததோ அன்றே காங்கிரஸ் தனக்கான கல்லறையை மாநில எல்லையில் தோண்டிக்கொண்டது" என காங்கிரஸையும், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தியையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பஞ்சாப் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, 117 இடங்களில், 92 இடங்களைப் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism