Published:Updated:

பஞ்சாப்பின் இளம்பெண் எம்.எல்.ஏ; காங் முன்னாள் அமைச்சரை வீழ்த்திய நரிந்தர் கௌர் பராஜ் - யார் இவர்?

நரிந்தர் கௌர் பராஜ்

காங்கிரஸைச் சேர்ந்த பஞ்சாப்பின் முன்னாள் அமைச்சர் விஜய் இந்தர் சிங்லாவைத் தேர்தலில் தோற்கடித்த, விவசாய குடும்பப் பெண்ணான நரிந்தர் கௌர் பராஜை, பஞ்சாப்பின் இளம் எம்.எல்.ஏ என அனைவரும் பாராட்டிவருகின்றனர்.

பஞ்சாப்பின் இளம்பெண் எம்.எல்.ஏ; காங் முன்னாள் அமைச்சரை வீழ்த்திய நரிந்தர் கௌர் பராஜ் - யார் இவர்?

காங்கிரஸைச் சேர்ந்த பஞ்சாப்பின் முன்னாள் அமைச்சர் விஜய் இந்தர் சிங்லாவைத் தேர்தலில் தோற்கடித்த, விவசாய குடும்பப் பெண்ணான நரிந்தர் கௌர் பராஜை, பஞ்சாப்பின் இளம் எம்.எல்.ஏ என அனைவரும் பாராட்டிவருகின்றனர்.

Published:Updated:
நரிந்தர் கௌர் பராஜ்

பஞ்சாப்பில் 117 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. பதவியேற்பு விழா, பகத் சிங்கின் கிராமமான கட்கட் கலானில் நடைபெற்றது. ஆம் ஆத்மி கட்சி சார்பில் சங்ரூர் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றிபெற்ற பராஜ், காங்கிரஸின் முன்னாள் அமைச்சராக இருந்த, விஜய் இந்தர் சிங்லாவை 36,430 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

நரிந்தர் கௌர் பராஜ், பாட்டியாலாவின் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். மேலும் உள்ளூரிலுள்ள சங்க்ரூர் கல்லூரியில் சட்டம் பயின்றார். இவருக்கு 27 வயதாகிறது. இவர் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய மூத்த சகோதரர் 2002-ல் காலமானார்.

நரிந்தர் கௌர் பராஜ்
நரிந்தர் கௌர் பராஜ்

2014-ம் ஆண்டு, பகவந்த் மானின் வாக்குச்சாவடியில் முகவராகப் பணியாற்றினார். நவம்பர் 2018-ல், ஆம் ஆத்மி கட்சியின் இளைஞரணிப் பிரிவின் சங்ரூர் பிரிவுத் தலைவராக நியமிக்கப்பட்டார். பஞ்சாப்பில் பிரசாரத்தின்போது அதிகமாகத் தன் தாயுடன் ஸ்கூட்டரில் அமர்ந்தபடி பிரசாரம் செய்தார். தற்போது இவர் குறித்தான தகவல்கள் இணையத்தில் பரவிவருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது தொடர்பாகப் பேசிய அவர், ``தாழ்த்தப்பட்டவர்களின் குரலை உயர்த்துவதே என்னுடைய நோக்கம். நாட்டின் வளர்ச்சி என்பது சாலைகள், கட்டடங்கள் அமைப்பதில் மட்டும் நின்றுவிடாமல் ஊழலை ஒழிப்பது, சுகாதாரம், கல்வித்துறையை மேம்படுத்துவது போன்ற செயல்களையும் உள்ளடக்கியது. பெண்கள், குழந்தைகளின் மேம்பாடு முக்கியம். நான் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பெண். ஒரு பெண்ணின் கையில் மாதம் 1,000 ரூபாய் இருந்தால் எதற்கெல்லாம் பயன்படும் என எனக்குத் தெரியும். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களான எங்களுக்குப் பணத்தின் முக்கியத்துவம் பற்றி நன்றாகத் தெரியும்'' என்றார்.

நரிந்தர் கௌர் பராஜ்
நரிந்தர் கௌர் பராஜ்
ட்விட்டர்

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, பராஜின் சொத்து மதிப்பு ரூ.24,409 என்றும், 50 வயதான விஜய் இந்தர் சிங்லாவின் சொத்து மதிப்பு ரூ.7 கோடி என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், பணபலமும், அதிகார பலமும் கொண்ட தலைவரை எதிர்த்து நின்று, பராஜ் வெற்றிபெற்றதால், அவருடைய வெற்றி பேசுபொருளாக மாறியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism