Published:Updated:

ஒப்பந்தங்களுக்கு கமிஷன்; பதவிநீக்கம் செய்யப்பட்ட சுகாதார அமைச்சர் கைது - பஞ்சாப் முதல்வர் அதிரடி!

பகவந்த் மான் ( ட்விட்டர் )

பஞ்சாப் சுகாதார அமைச்சர் விஜய் சிங்லா ஊழலில் ஈடுபட்டுவருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்துவந்தன. ஒப்பந்தங்களுக்கு அதிகாரிகளிடம் அவர் 1% கமிஷன் கேட்டதாகக் கூறப்படுகிறது.

ஒப்பந்தங்களுக்கு கமிஷன்; பதவிநீக்கம் செய்யப்பட்ட சுகாதார அமைச்சர் கைது - பஞ்சாப் முதல்வர் அதிரடி!

பஞ்சாப் சுகாதார அமைச்சர் விஜய் சிங்லா ஊழலில் ஈடுபட்டுவருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்துவந்தன. ஒப்பந்தங்களுக்கு அதிகாரிகளிடம் அவர் 1% கமிஷன் கேட்டதாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
பகவந்த் மான் ( ட்விட்டர் )

சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த கிராமத்தில் நடந்த விழாவில் பஞ்சாப் மாநிலத்தின் 17-வது முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் பதவியேற்றார். அப்போது பஞ்சாப் மாநிலத்தில் ஊழல், வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்று பகவந்த் சிங் உறுதியளித்தார். அதன் தொடர்ச்சியாக பல்வேறு அதிரடி நடவகைக்கைகளை அவர் மாநிலத்தில் மேற்கொண்டுவருகிறார்.

பகவந்த் மான்
பகவந்த் மான்

இந்த நிலையில், பஞ்சாப் சுகாதார அமைச்சர் விஜய் சிங்லா ஊழலில் ஈடுபட்டுவருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்துவந்தன. ஒப்பந்தங்களுக்கு அதிகாரிகளிடம் அவர் 1% கமிஷன் கேட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அமைச்சர் ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டதற்கான சரியான ஆதாரங்கள் கிடைத்ததால், முதல்வர் பரிந்துரையின்பேரில் இன்று காலை விஜய் சிங்லா பதவிநீக்கம் செய்யப்பட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விஜய் சிங்லா
விஜய் சிங்லா

அமைச்சர் பதவியிலிருந்து ஒருவர் நீக்கப்பட்டது மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அதிர்வலைகள் அடங்குவதற்குள் அடுத்த சில மணி நேரங்களில் விஜய் சிங்லாவை பஞ்சாப் போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

பஞ்சாப் அமைச்சரவையில், அமைச்சர் ஒருவர் பதவிநீக்கம் செய்யப்பட்டு, கைதாகியிருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விரைவில் இந்த இலாகாவுக்கான புதிய அமைச்சர் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், ``பகவந்த் உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். உங்கள் செயல் என் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது. இன்று முழு தேசமும் ஆம் ஆத்மியை நினைத்துப் பெருமைகொள்கிறது'' எனப் பதிவிட்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism