Published:Updated:

``டெல்லியின் ரிமோட் கன்ட்ரோலில் பஞ்சாப்..!" - ஆம் ஆத்மியைச் சாடும் எதிர்க்கட்சிகள்

பக்வந்த் மான் - அரவிந்த் கெஜ்ரிவால்

`பகவந்த் மான் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் என்பது முன்னதாகவே முடிவான ஒன்றுதான். பஞ்சாப் அதிகாரிகளின் கூட்டத்துக்குத் தலைமை தாங்கியதன் மூலம் கெஜ்ரிவால் இதை நிரூபித்துவிட்டார்.' - அமரீந்தர் சிங்.

``டெல்லியின் ரிமோட் கன்ட்ரோலில் பஞ்சாப்..!" - ஆம் ஆத்மியைச் சாடும் எதிர்க்கட்சிகள்

`பகவந்த் மான் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் என்பது முன்னதாகவே முடிவான ஒன்றுதான். பஞ்சாப் அதிகாரிகளின் கூட்டத்துக்குத் தலைமை தாங்கியதன் மூலம் கெஜ்ரிவால் இதை நிரூபித்துவிட்டார்.' - அமரீந்தர் சிங்.

Published:Updated:
பக்வந்த் மான் - அரவிந்த் கெஜ்ரிவால்

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று, பகவந்த் மான் தலைமையில் ஆட்சியமைத்தது. இந்த நிலையில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் `பஞ்சாப் ஸ்டேட் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்'-ன் உயரதிகாரிகளைச் சந்தித்ததாகவும், அந்த நிகழ்வில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பங்கு பெறவில்லை எனவும் செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து முதல்வர் பகவந்த் மான் இல்லாமல் பஞ்சாப் உயரதிகாரிகளை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்திருப்பதை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துவருகின்றன.

இது குறித்து ட்வீட் செய்துள்ள பஞ்சாப் மாநில காங்கிரஸின் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங், ``முதல்வர் பகவந்த் மான் இல்லாமல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சம்மன் அனுப்பியுள்ளார். இது பஞ்சாப்பில் டெல்லியின் ரிமோட் கன்ட்ரோலை வெளிப்படுத்துகிறது. கூட்டாட்சிமுறையின் மீறலைத் தெளிவாகக் காட்டுகிறது. பஞ்சாப்பின் பெருமைக்கே இது அவமானம். இருவரும் இதைத் தெளிவுபடுத்த வேண்டும்" என விமர்சித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது மட்டுமல்லாமல், பஞ்சாப்பின் முன்னாள் முதல்வரான அமரீந்தர் சிங்கும், ``இது நடக்குமென்று எதிர்பார்க்கப்படுவதற்கு முன்பாகவே பஞ்சாப்பை கெஜ்ரிவால் கைப்பற்றிவிட்டார். பகவந்த் மான் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் என்பது முன்னதாகவே முடிவான ஒன்றுதான். தற்போது டெல்லியில் பஞ்சாப் அதிகாரிகளின் கூட்டத்துக்குத் தலைமை தாங்கியதன் மூலம் கெஜ்ரிவால் இதை நிரூபித்துவிட்டார்" என ட்வீட் செய்திருந்தார்.

எதிர்க்கட்சிகளின் இது போன்ற விமர்சனங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் மல்விந்தர் சிங், ``அரவிந்த் கெஜ்ரிவால் எங்களின் தேசிய ஒருங்கிணைப்பாளர். பஞ்சாப்பின் வளர்ச்சிக்காகவும், ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்காகவும் இது போன்ற கூட்டங்கள் நடத்தப்படும்போது, எதிர்க்கட்சிகள் அதை விமர்சனம் செய்யாமல், ஆதரவு தர வேண்டும்" எனக் கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism