Published:Updated:

உத்தரகாண்ட்: தேர்தலில் தோற்றும் மீண்டும் முதல்வராகும் புஷ்கர் சிங் தாமி!

உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ( ட்விட்டர் )

உத்தரகாண்ட் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் தோல்வி அடைந்த நிலையிலும், மீண்டும் முதல்வராக புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

உத்தரகாண்ட் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் பா.ஜ.க 47 இடங்களைக் கைப்பற்றியது. ஆனால், காதிமா தொகுதியில் போட்டியிட்ட அந்த மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தோல்வி அடைந்தார். இதனால் அந்த மாநிலத்தில் புதிய முதலமைச்சர் குறித்து குழப்பம் நீடித்து வந்தது.

உத்தரகாண்ட் முதல்வர் - புஷ்கர் தாமி
உத்தரகாண்ட் முதல்வர் - புஷ்கர் தாமி
Twitter

பா.ஜ.க பஞ்சாப்பை தவிர 4 மாநிலங்களில் வெற்றி பெற்றாலும் கூட, உடனடியாக ஆட்சி அமைக்கக் காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் உத்தரகாண்டில் உள்ள டேராடூனில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் புஷ்கர் சிங் தாமி முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.

``நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற புஷ்கர் சிங் காரணமாக இருந்தார். மேலும், அவருடைய நிர்வாகத் திறமை காரணமாக இருக்கு மீண்டும் பொறுப்பு வழங்க வழங்கப்பட்டுள்ளது. இவர் போட்டியிடும் எம்.எல்.ஏ தொகுதி விரைவில் அறிவிக்கப்படும்" என பா.ஜ.க சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!