Published:Updated:

``தென் மாவட்டத்தை தனிமைப்படுத்துவதுதான் அரசின் நோக்கமா?" - கைது நடவடிக்கைக்கு கிருஷ்ணசாமி கண்டனம்

மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கப்பலூர் சுங்கச்சாவடிக்கு முன்பாக அவர் வந்து கொண்டிருந்தபோது, காவல்துறையினர் இடைமறித்து டாக்டர் கிருஷ்ணசாமியையும், அவரது ஆதரவாளர்களையும் கைதுசெய்யப்பட்டார்.

``தென் மாவட்டத்தை தனிமைப்படுத்துவதுதான் அரசின் நோக்கமா?" - கைது நடவடிக்கைக்கு கிருஷ்ணசாமி கண்டனம்

மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கப்பலூர் சுங்கச்சாவடிக்கு முன்பாக அவர் வந்து கொண்டிருந்தபோது, காவல்துறையினர் இடைமறித்து டாக்டர் கிருஷ்ணசாமியையும், அவரது ஆதரவாளர்களையும் கைதுசெய்யப்பட்டார்.

Published:Updated:

தமிழகத்தில் திருத்தப்பட்ட மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், தி.மு.க அரசை கண்டித்தும் புதிய தமிழகம் கட்சி சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சென்னையில் இருந்து விமானம் மூலமாக மதுரைக்கு இன்று காலை வந்தடைந்தார். அவரை வரவேற்பதற்காக, விருதுநகர் மற்றும் தென்மாவட்டங்களை சேர்ந்த புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகளும் வாகனங்களில் சென்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதுரை விமான நிலையம் வந்திறங்கிய டாக்டர் கிருஷ்ணசாமி அங்கிருந்து சாலை வழியாக விருதுநகருக்கு புறப்பட்டார். மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கப்பலூர் சுங்கச்சாவடிக்கு முன்பாக அவர் வந்து கொண்டிருந்தபோது, காவல்துறையினர் இடைமறித்து டாக்டர் கிருஷ்ணசாமியையும், அவரது ஆதரவாளர்களையும் கைதுசெய்யப்பட்டார்.

டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி

இது குறித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியிடம் நாம் பேசினோம். ``இன்றைக்கு தமிழக மக்களை வெகுவாக பாதித்திருக்கக்கூடிய மின்கட்டண உயர்வை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள், கண்டன போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஏற்கெனவே சென்னை உட்பட பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி முடித்துவிட்டு அடுத்தகட்ட சுற்றுப்பயணமாக தென்மண்டல நகரங்களான‌ விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டோம். இதில் முதல் இடமாக விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடத்திட இரண்டு வாரங்களுக்கு முன்பே அனுமதிக்கேட்டு காவல்துறையிடம் விண்ணப்பித்து அனுமதி வாங்கியுள்ளோம். ஆர்ப்பாட்டத்திற்காக, மதுரையில் இருந்து விருதுநகர் கிளம்பிய வழியில் இடைமறித்த காவல்துறையினர் அனுமதிக்கப்பட்ட வாகனங்களைவிட அதிக எண்ணிக்கையிலான வாகனத்தில் கட்சித்தொண்டர்கள் பின் தொடர்வதாக கூறி எங்களை கைதுசெய்தனர்.

காவல்துறையின் இந்த நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் உள்ள மற்ற தலைவர்களையும் அவர்களின் தொண்டர்கள் அனுமதிக்கப்பட்ட வாகன எண்ணிக்கையில்தான் பின் தொடர்கிறார்களா? அப்படி இருக்கையில் புதிய தமிழகம் கட்சியினரை மட்டும் சப்பைக்கட்டு காரணம் சொல்லி கைதுசெய்து முடக்குவது கடும் கண்டனத்திற்குரியது. புதிய தமிழகம் கட்சி சார்பில் தென்மண்டலத்தில் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு இதை திட்டமிட்டு செய்துள்ளது. தென் மாவட்டத்தை தனிமைப்படுத்தி புதிய தமிழகம் கட்சியினரை செயல்படவிடாமல் தடுக்க நினைப்பதுதான் இந்த கைது நடவடிக்கையின் காரணமாக இருக்குமென கருதுகிறேன். இது அரசியல் உள்நோக்கத்தோடு செய்யப்பட்ட செயலாகும். தென்மாவட்டத்தில் மற்ற கட்சியினர், தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினால் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தால் அது நிச்சயம் பெரிய அளவில் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை தெரிந்துகொண்டு எங்களை முடக்க நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது" என்றார் ஆவேசமாக.

மறியல்
மறியல்
சாலை மறியல்
சாலை மறியல்

இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக, விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன் புதிய தமிழகம் கட்சியினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து போராட்டத்தை கலைக்க முயன்றனர். ஆனால் இதில் உடன்பாடு எட்டப்படாததால் சாலை மறியலில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினர் அனைவரும் கைதுசெய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.