Published:Updated:

``ராணியோ, யுவராஜனோ சட்டத்துக்கு மேல் யாரும் இல்லை!" - சோனியா, ராகுலைச் சாடிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

``ராணியாக இருந்தாலும் சரி, யுவராஜனாக இருந்தாலும் சரி, ஜனநாயகம் மற்றும் சட்டத்துக்கு மேல் இங்கு யாரும் இல்லை." - மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

``ராணியோ, யுவராஜனோ சட்டத்துக்கு மேல் யாரும் இல்லை!" - சோனியா, ராகுலைச் சாடிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

``ராணியாக இருந்தாலும் சரி, யுவராஜனாக இருந்தாலும் சரி, ஜனநாயகம் மற்றும் சட்டத்துக்கு மேல் இங்கு யாரும் இல்லை." - மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

Published:Updated:
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜூலை 18 அன்று மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்தே, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், ஜி.எஸ்.டி வரி உயர்வு குறித்து விவாதம் நடத்தவேண்டும் என நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த வரிசையில் ராஜ்ய சபாவில் நேற்று அவைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 19 எதிர்க்கட்சி எம்.பி-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். முன்னதாக இந்த வார தொடக்கத்தில், சபாநாயகர் ஓம் பிர்லாவின் எச்சரிப்பை மீறி அவைக்குள் பதாகைகளை வைத்திருந்ததற்காக, காங்கிரஸ் எம்.பி-க்கள் 4 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

ராஜ்ய சபா எதிர்கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
ராஜ்ய சபா எதிர்கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

இதுவொருபுறம் நடந்துகொண்டிருக்க, சோனியா காந்திமீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்திவருகின்றனர். இதில் நேற்று நடந்த போராட்டத்தில் ராகுல் காந்தி கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் ராஜ்ய சபா எதிர்கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ``எம்.பி-க்களின் இடைநீக்கம் சட்டவிரோதமானது. மக்களின் குரலை நசுக்குவதன் மூலம் மோடி அரசு, இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளை நடத்த அனுமதிக்க முடியாது" என்று கூறியிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

இந்த நிலையில் மல்லிகார்ஜுன கார்கே-வின் இத்தகைய கருத்துக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பதிலளித்திருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய பிரகலாத் ஜோஷி, ``ராணியாக இருந்தாலும் சரி, யுவராஜனாக இருந்தாலும் சரி, ஜனநாயகம் மற்றும் சட்டத்துக்கு மேல் இங்கு யாரும் இல்லை. காங்கிரஸ், தன்னை நீதித்துறைக்கு மேலாக நினைத்துக்கொண்டிருக்கிறது. விசாரணையிலிருந்து ஏன் தப்பிக்க நினைக்கிறார்கள்? அவர்கள் விசாரணையை முடிக்கட்டும், அப்போதுதானே உண்மை வெளிவரும்" என்று கூறினார்.