போலந்து அதிபர் ஆண்ட்ரேஜ், அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்துப் பேசினார்கள். அப்போது செய்தியாளர் ஒருவர், ``உக்ரைனின் அகதிகளை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளுமா” என்று கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து போலாந்து அதிபரிடமும் கேள்வி கேட்கப்பட்டது. இருவரும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் முன்பு, ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர். மேலும் கமலா ஹாரிஸ் மேடையில் "A friend in need is a friend indeed,” என்று கொஞ்சம் சத்தமாகச் சிரித்துக்கொண்டே பேசினார். உக்ரைன் அகதிகள் பற்றிக் கேட்டதற்காகக் கமலா ஹாரிஸ் சிரிக்கவில்லை என்று சிலர் கருத்து கூறி வருகின்றனர்.
எனினும் சிக்கலில் சிக்கித் தவிக்கும் உக்ரைன் அகதிகள் குறித்த கேள்விக்கு, ஒரு நாட்டின் துணை அதிபர் சிரிப்பது, அவர் வகிக்கும் பதவிக்கு அழகு கிடையாது என இணையவாசிகள் கமலா ஹாரிஸை விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
