Published:Updated:

``27 கோயில்களை இடித்து கட்டப்பட்டது குதுப் மினார்..!" - விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு குற்றச்சாட்டு

குதுப் மினார் ( ட்விட்டர் )

டெல்லியில் உள்ள குதுப் மினார் கோபுரம் 27 கோயில்களை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு குற்றம்சாட்டியிருக்கிறது.

``27 கோயில்களை இடித்து கட்டப்பட்டது குதுப் மினார்..!" - விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு குற்றச்சாட்டு

டெல்லியில் உள்ள குதுப் மினார் கோபுரம் 27 கோயில்களை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு குற்றம்சாட்டியிருக்கிறது.

Published:Updated:
குதுப் மினார் ( ட்விட்டர் )

குதுப் மினார் கட்டடம் முஸ்லிம்களின் ஆட்சியைக் கொண்டாடும் வகையில் கடந்த 1193-ம் ஆண்டில் டெல்லி சுல்தான் குத்புதின் ஐபக் என்பவரால் கட்டப்பட்டது. இது 73 மீட்டர் உயரத்துடன், ஐந்து அடுக்குகளைக்கொண்ட இந்தியாவின் மிக உயரிய கோபுரம். செங்கற்களால் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய கோபுரம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

இந்த நிலையில், குதுப் மினார் கோபுரம் 27 கோயில்களை இடித்துவிட்டு கட்டப்பட்டதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு குற்றம்சாட்டியிருக்கிறது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ``குதுப் மினார் உண்மையில் ஒரு விஷ்ணு ஸ்தூபி. இந்து - ஜெயின் மதங்களின் 27 கோயில்களை இடித்துவிட்டு, அதிலிருந்து பெறப்பட்ட பொருள்களைவைத்து கட்டப்பட்டுள்ளது. இந்து சமூகத்தைக் கிண்டல் செய்வதற்காகவே இது கட்டப்பட்டது. இந்தப் பகுதியில் இடிக்கப்பட்ட 27 கோயில்களை மீண்டும் கட்ட வேண்டும். அங்கு இந்துச் சடங்குகள், பிரார்த்தனைகளை மீண்டும் தொடங்க அனுமதிக்க வேண்டும்" எனக் கூறினார்.

இவரின் பேச்சு தற்போது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism