Published:Updated:

``குதுப் மினார் வழிபாட்டுத் தலமல்ல... நினைவுச் சின்னம்!" - நீதிமன்றத்தில் தொல்லியல் துறை தகவல்

குதுப் மினார் கோபுரம்

டெல்லியில் உள்ள குதுப் மினார் வழிபாட்டுத் தலமல்ல, நினைவு சின்னம் என டெல்லி நீதிமன்றத்தில் தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது.

``குதுப் மினார் வழிபாட்டுத் தலமல்ல... நினைவுச் சின்னம்!" - நீதிமன்றத்தில் தொல்லியல் துறை தகவல்

டெல்லியில் உள்ள குதுப் மினார் வழிபாட்டுத் தலமல்ல, நினைவு சின்னம் என டெல்லி நீதிமன்றத்தில் தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது.

Published:Updated:
குதுப் மினார் கோபுரம்

குதுப் மினார் வழிபாட்டுத் தலம் 27 இந்து, ஜெயின் கோயில்களை இடித்துக் கட்டப்பட்டது என அண்மையில் சில இந்து அமைப்புகள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, சங்கர் ஜெயின் என்பவர் டெல்லி நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், `குதுப் மினார் கோபுரம் கட்டப்படுவதற்கு முன்பு, அங்கு 27 கோயில்கள் இருந்தன. அந்தக் கோயில்களில் இருந்த சிலைகள், இப்போதும் அங்கு இருக்கின்றன. எனவே, குதுப் மினார் வளாகத்தில் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

டெல்லி உயர் நீதிமன்றம்
டெல்லி உயர் நீதிமன்றம்

அவரின் மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக ஆஜரான தொல்லியல் துறை, ``குதுப் மினார் ஒரு நினைவுச் சின்னம். அது ஒரு வழிபாட்டுத் தலமல்ல. இது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதற்கு முன்பு, எந்தச் சமூகத்தின் வழிபாட்டுத் தலமாகவும் இல்லை. தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின்பு, அந்த இடத்தில் மாற்றம் செய்வது சட்டத்துக்கு விரோதமானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குதுப் மினார்
குதுப் மினார்

கட்டுப்பாட்டின் கீழ் வருவதற்கு முன்பு எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலை தொடர வேண்டும். குதுப் மினார் வளாகத்தில் வழிபாடு நடத்த உரிமை கேட்டு தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுவைத் தள்ளுபடி செய்யவேண்டும்'' எனத் தெரிவிக்கப்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism