Published:Updated:

வேட்டி, சேலை திட்டம்: ``பதில் வந்ததே தவிர, பலன் கிடைக்கவில்லை" - ஆர்.பி.உதயகுமார் காட்டம்

ஆர்.பி.உதயகுமார்

"பதில் சொல்வதில் நீங்கள் வல்லவராக இருக்கலாம். ஆனால், மக்களுக்குத் திட்டங்களைஜ் கொண்டு சேர்ப்பதில் இந்த அரசு தோல்வி அடைந்திருக்கிறது" என்று கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தியை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்திருக்கிறார்.

வேட்டி, சேலை திட்டம்: ``பதில் வந்ததே தவிர, பலன் கிடைக்கவில்லை" - ஆர்.பி.உதயகுமார் காட்டம்

"பதில் சொல்வதில் நீங்கள் வல்லவராக இருக்கலாம். ஆனால், மக்களுக்குத் திட்டங்களைஜ் கொண்டு சேர்ப்பதில் இந்த அரசு தோல்வி அடைந்திருக்கிறது" என்று கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தியை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்திருக்கிறார்.

Published:Updated:
ஆர்.பி.உதயகுமார்

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விடுத்திருக்கும் அறிக்கையில், "கைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த எம்ஜிஆரால் 1983-ம் ஆண்டு தைப்பொங்கலுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்குகிற திட்டம் தொடங்கப்பட்டது.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

அதைத் தொடர்ந்து அம்மா ஆட்சியில் அந்தத் திட்டம் மேம்படுத்தப்பட்டது. எடப்பாடியார் ஆட்சியில் 2021-ம் ஆண்டு ரூ.2,500, பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வேட்டி, சேலை வழங்கப்பட்டது.

தற்போது வேட்டி சேலைகள் வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதை எடப்பாடியார் அறிக்கை மூலம் அரசுக்குக் கண்டனமும் எச்சரிக்கையும் விடுத்திருந்தார். வரும் பொங்கலுக்கு வழங்கவேண்டிய வேட்டி, சேலை நெசவு செய்யும் பணியில் திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால் முடங்கிப்போயிருக்கிறது. இதனால் நெசவாளர்களுக்கும், கூட்டுறவு சொசைட்டிகளுக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

இலவச வேட்டி, சேலை!
இலவச வேட்டி, சேலை!

90 சதவிகித நெசவாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட தரமில்லாத நூல்களை அரசுக்கே திருப்பி அனுப்பிவருவதாகவும், தரமான நூல் தந்தால்தான் வேட்டி, சேலை தயாரிக்க முடியும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருப்பதாகவும் செய்திகள் வந்துகொண்டிருப்பதை எடப்பாடியார் ஆணித்தரமாக அரசின் கவனத்துக்கு எடுத்து வைத்தார். 

இதன் காரணமாக தைப்பொங்கலுக்கு ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்படுமா என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் நெசவாளர் குடும்பங்கள் வேலை இழந்து தவிப்பதைக் கண்டித்து அதிமுக மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று எடப்பாடியார் கூறிய குற்றச்சாட்டுக்கு கைத்தறித்துறை அமைச்சரின் பதிலில் உண்மை இல்லை. 

கடந்த ஆண்டும் இது குறித்து சட்டமன்றத்தில் கேட்கப்பட்டபோது பதில் வந்ததே தவிர, மக்களுக்குப் பலன் கிடைக்கவில்லை. பதில் சொல்வதில் நீங்கள் வல்லவராக இருக்கலாம். ஆனால், மக்களுக்குத் திட்டங்களைக் கொண்டு சேர்ப்பதில் இந்த அரசு தோல்வியடைந்திருக்கிறது.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

எடப்பாடியார் மக்களுக்காகத் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை  நடத்திக்கொண்டிருக்கிறார். உரிமைக்குரல் எழுப்பி கரும்பை மக்களுக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறார். மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளைத் தொடர்ந்து அரசுக்கு முன்வைத்துவருகிறார். வேட்டி, சேலை திட்டம் குறித்து எடப்பாடியாரின் குற்றச்சாட்டுக்கு சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் கூறியிருக்கிற பதில் கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக இருக்கிறதே தவிர, உள்ளபடி உண்மையை எடுத்துச் சொல்கிற அறிக்கையாக அமையவில்லை. பதில் தந்து நேரத்தைச் செலவழிக்காமல் பலன்களை மக்களிடத்திலே கொண்டுபோய் சேர்ப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.