Published:Updated:

"பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெ.க்கு அடுத்து எடப்பாடி!" - ஆர்.பி.உதயகுமார் 'லாஜிக்'

முதல்வர் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்துவிடுவார். நாங்கள் தாமதமாக கிளம்பினாலும் எங்களுக்காகக் காத்திருப்பார்.

rb udhayakumar
rb udhayakumar

முதல்வருடன் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, மதுரை வந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் பயணம்பற்றி சில கேள்விகளை முன்வைத்தோம். விரிவாக படிக்க http://bit.ly/2kzOYGg

"முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியிருக்கிறதே?"

"எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுக்குச் சென்றதை விமர்சிக்கிறார்கள். ஆனால், ஆந்திர முதல்வர் ஒவ்வொரு மாதமும் அமெரிக்கா சென்று முதலீடுகளைப் பெறுகிறார். தெலங்கானா முதல்வர் அமெரிக்காவிலேயே அமைச்சர் ஒருவரை அமரவைத்து முதலீடுகளைப் பெறுகிறார். நாம் இப்போதுதான் முதல்முறையாகச் சென்றிருக்கிறோம். இதன்மூலம் பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு அடுத்து, காலத்தால் அழியாத மாபெரும் தலைவராக எடப்பாடி உருவெடுத்துள்ளார். விமர்சனங்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை."

எந்த சிக்னலிலும் காவல்துறையினரைப் பார்க்க முடியவில்லை. ஆனால், யாரும் சாலை விதிகளை மீறுவதில்லை

"மாறுபட்ட காலநிலை, புதிய மனிதர்கள் இவற்றை எல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எப்படி எதிர்கொண்டார்?"

"மக்கள்மீது அக்கறை கொண்டவர்களுக்கு இவையெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. முதல்வர் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்துவிடுவார். நாங்கள் தாமதமாக கிளம்பினாலும் எங்களுக்காகக் காத்திருப்பார். முதலீட்டாளர்கள் மத்தியில் நிறைய பேசி நம்பிக்கையை ஏற்படுத்தினார். ஒருநாள்கூட அவர் ஓய்வெடுக்கவில்லை. அவரைப் பார்த்து, அங்குள்ள மக்கள் 'எப்படி உங்களால் இப்படி சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது?' என்று ஆச்சர்யப்பட்டு கேட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!"

"அமெரிக்காவில் நீங்கள் பார்த்து வியந்த விஷயம்?"

rb udhayakumar
rb udhayakumar

"அங்குள்ள மக்கள் விதிகளை மதிக்கிறார்கள். எந்த சிக்னலிலும் காவல்துறையினரைப் பார்க்க முடியவில்லை. ஆனால், யாரும் சாலை விதிகளை மீறுவதில்லை. தவிர, எங்கு பார்த்தாலும் 12 வழிச்சாலைகள், 16 வழிச்சாலைகள், கடலுக்குள் சாலைகள், மிகப்பெரிய மேம்பாலங்கள் என்று பிரமிக்க வைக்கின்றன! ஆனால், இங்கு ஒரு எட்டு வழிச்சாலை அமைக்கக்கூட எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்."

- அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் முழுமையான பேட்டியை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > ஆமாம்... நான் ஒன்பதாவது அதிசயம்தான்! - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஒப்புதல் https://www.vikatan.com/government-and-politics/politics/minister-rb-udhayakumar-talks-about-the-current-political-scenario

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/