Published:Updated:

மாவட்டச் செயலாளர் பதவிகளுக்குக் கடும் போட்டி: முந்துவது யார் யார்... சேலம் திமுக-வில் நடப்பது என்ன?!

மு.க.ஸ்டாலின்!

திமுக-வில் தமிழ்நாடு முழுவதும் மாவட்டச் செயலாளருக்கான தேர்ந்தெடுப்பு விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில், தற்போது சேலத்தில் பெரும் போட்டி நிலவுகிறதாம்.

மாவட்டச் செயலாளர் பதவிகளுக்குக் கடும் போட்டி: முந்துவது யார் யார்... சேலம் திமுக-வில் நடப்பது என்ன?!

திமுக-வில் தமிழ்நாடு முழுவதும் மாவட்டச் செயலாளருக்கான தேர்ந்தெடுப்பு விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில், தற்போது சேலத்தில் பெரும் போட்டி நிலவுகிறதாம்.

Published:Updated:
மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முழுவதும் தி.மு.க மாவட்டச் செயலாளர்களை தேர்ந்தெடுக்கும் பணி விரைவில் நடைபெறவுள்ளது. இத்தனை ஆண்டுகளாக கட்சியின் மாவட்டச் செயலாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை கட்சி சீனியர்கள் பார்த்துவந்தனர். ஆனால் இந்த முறை முதல்வர் ஸ்டாலின் தனது நேரடிக் கட்டுப்பாடில் இதை எடுத்துக்கொண்டு, இதற்காகவே தனிக்குழு அமைத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னாள், இந்நாள் மாவட்டச் செயலாளர்கள் பற்றிய விவரங்களையும், அவர்கள் இதுவரை கட்சிக்கு ஆற்றிய பணிகள் குறித்தும் விசாரித்து ரிப்போர்ட் தயார் செய்திருக்கிறாராம். மேலும் புதிதாக மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்படவிருக்கும் மாவட்டங்களில் மவுசான நபர்களைப் பற்றியும் கூடுதலாக விசாரிக்கக் கூறியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எம்.எல்.ஏ ராஜேந்திரன்
எம்.எல்.ஏ ராஜேந்திரன்

அந்த வகையில், தமிழ்நாட்டில் சேலம், திருச்சி, கோவை, ஈரோடு போன்ற முக்கிய மாவட்டங்களில் ஏற்கெனவே இருக்கும் மாவட்டச் செயலாளர்களைப் பற்றிய விவரங்களைக் கையிலெடுத்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், பொறுப்பில் இருந்துவரும் 20-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்களை மாற்றவிருப்பதாகவும் கட்சிக்குள் ஒரு பேச்சு அடிபட்டுக்கொண்டிருக்கிறது.

டி.எம்.செல்வகணபதி
டி.எம்.செல்வகணபதி

அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் பதவிக்கான போட்டி கடுமையாக இருந்துவருகிறது. சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரனுக்கு இந்த முறை வாய்ப்பு மீண்டும் கிடைக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதில், எம்.எல்.ஏ ராஜேந்திரன்மீது சில சர்ச்சைகள் அவ்வப்போது ஏற்பட்டாலும், கட்சியின் தலைமை அவரை விட்டுக்கொடுக்காமல் மீண்டும் மாவட்டச் செயலாளர் பொறுப்பை வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
எஸ்.ஆர்.சிவலிங்கம்
எஸ்.ஆர்.சிவலிங்கம்

அதே போன்று சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் டி.எம்.செல்வகணபதிக்கு மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவி வழங்குவதற்கும் வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்படுகிறது. மேலும், கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்துவரும் எஸ்.ஆர்.சிவலிங்கத்துக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா என்று கட்சி வட்டாரத்தில் சந்தேகப் பேச்சு அடிபட்டுவருகிறது. காரணம், சேலத்துக்கு என்னதான் கே.என்.நேரு பொறுப்பு அமைச்சராக இருந்தாலும், தற்போது சேலத்தின் நிழல் அமைச்சராக இருந்து வருபவர் வீரபாண்டியாரின் உறவினரான பாரப்பட்டி சுரேஷ்தான். இவர் சொல்வதுதான் மாவட்டத்தில் நடந்துவருவதாகவும், கட்சி நிர்வாகிகளுக்குள் நல்ல அண்டர்ஸ்டாண்டிங்கில் இருப்பதாலும், அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவும் இருப்பதாலும் தற்போது இவருக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாகப் பேச்சு இருந்துவருகிறது.

 பாரப்பட்டி சுரேஷ்
பாரப்பட்டி சுரேஷ்

இதற்கிடையே புதிதாக ஒரு நிர்வாகியின் பெயரும் கட்சியின் சீனியர்கள் மூலமாக மேலிடத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. வீரபாண்டியார் குடும்பத்தின் மூத்த மருமகனும், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான காசி விஸ்வநாதனின் மகன் மருத்துவர் தருண். இவர் தி.மு.க-வின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளராக இருந்துவருகிறார். இவருக்கு உதயநிதியின் ஆதரவும், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் ஆதரவும் இருப்பதால் இந்த முறை மாவட்டச் செயலாளர் பதவிக்கு இவருடைய பெயரும் தலைமையிடம் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

மருத்துவர் தருண்
மருத்துவர் தருண்

ஆட்சி அமைந்ததிலிருந்து இளைஞர் அணியினர் சிறப்பாகச் செயல்பட்டுவருவதால், தலைமை அவர்களுக்கு முக்கியப் பொறுப்புகளை வழங்கியிருக்கிறது. அந்த வகையில், இந்த முறை உதயநிதியும் மாவட்டச் செயலாளர் பதவிக்கு நல்ல துடிப்பான இளைஞர்களை அமர்த்த வேண்டும் என்று முதல்வரிடம் கேட்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சேலம் மாவட்ட தி.மு.க-வினர் பதவியைத் தக்கவைப்பதற்காக பரப்பரப்பாக செயலாற்றிவருகின்றனர். என்ன நடக்குமென்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!