Published:Updated:

விஜயகாந்த் ‘ஃபீனிக்ஸ்’ பறவை... ரஜினி கட்சியில் சேருவேன்!

ராதாரவி
பிரீமியம் ஸ்டோரி
ராதாரவி

பளீர் ராதாரவி

விஜயகாந்த் ‘ஃபீனிக்ஸ்’ பறவை... ரஜினி கட்சியில் சேருவேன்!

பளீர் ராதாரவி

Published:Updated:
ராதாரவி
பிரீமியம் ஸ்டோரி
ராதாரவி

ராதாரவி என்றாலே பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது. திரைப்படப் பாடல்கள் வெளியீட்டு விழா, செய்தியாளர் சந்திப்பு என எதுவாக இருந்தாலும் சர்ச்சைப் பேச்சுகளால் கவனத்தை ஈர்ப்பார். இப்போதும், ‘‘தெலுங்கர்கள் இல்லையென்றால், தமிழ்நாடு எப்படி வளர்ந்திருக்கும்? தெலுங்கர்கள் இல்லாமல் அமைச்சரவையை அமைக்க முடியாது’’ எனப் பற்றவைத்திருக்கிறார் ராதாரவி. அவரிடம் பேசினோம்.

‘‘நான் சொன்னது 100 சதவிகிதம் உண்மை. பெரியார் கன்னடராக இருந்தாலும் ஏற்றுக்கொண்டோம். எம்.ஆர்.ராதா தெலுங்கராக இருந்தாலும் ஏற்றுக்கொண்டோம். பல ஆண்டுகளாக தெலுங்கு பேசும் மக்கள் தமிழ்நாட்டில்தான் வசிக்கிறார்கள். தமிழ்நாடும் ஆந்திராவும் ஒரே மாநிலமாக இருந்ததுதான் வரலாறு. ஆனால், இப்போது திடீரென `வந்தேறிகள்’ என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்? தெலுங்கு பேசும் மக்களின் ஓட்டு மட்டும் வேண்டும். ஆனால், அவர்களை வந்தேறிகள் என்று சொல்வோம் என்றால், எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? தமிழ்நாட்டுக்காகத்தானே நாங்களும் வாழ்கிறோம், தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகத்தானே நாங்களும் போராடுகிறோம், திராவிட அரசியல்தானே நாங்களும் பேசுகிறோம்?’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘உங்கள் நண்பர் விஜயகாந்த், பொதுக்கூட்டங்களில் மீண்டும் கலந்துகொள்ள ஆரம்பித்துவிட்டாரே?’’

‘‘அவர் ஒரு ஃபீனிக்ஸ் பறவை. மீண்டும் பழைய ஆளாக வருவார். விஜயகாந்த்தை வீழ்த்த முடியாது.’’

‘‘நடிகர் சங்கப் பிரச்னைகள் தீர்ந்துவிட்டனவா?’’

‘‘அது எப்படித் தீரும்? நடிகர் சங்கத்தில் பிரச்னை ஏற்பட்டபோது கமல்ஹாசன், விஜயகுமார், நாசர், விஷால் என எல்லோரும் என்னை சினிமாவில் நடிக்கவிடாமல் தடுக்கும் அத்தனை வேலைகளையும் செய்தார்கள். நான் என்ன சினிமாவைவிட்டா போய்விட்டேன்... இங்கேதானே இருக்கிறேன். நடிகர் சங்கக் கட்டடத்திலேயே விஷால் தம்பி கல்யாணம் கட்டிக்கொள்ளட்டும் என்றுதானே காத்திருந்தேன். நடக்கவில்லையே... விஷாலை ஆஹா ஒஹோவென புகழ்ந்துகொண்டிருந்த ஐசரி கணேஷ், இப்போது என்னைப் புரிந்துகொண்டு என் பக்கம் வந்திருக்கிறார். காலம் மாறும்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘ரஜினி, வரும் ஜனவரியில் கட்சியின் பெயரை அறிவிக்கிறாராமே?’’

‘‘ரஜினி தீர்க்கமாக முடிவெடுத்து, அரசியல் கட்சி ஆரம்பித்து தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால், நிச்சயம் நான் அவர் கட்சியில் சேருவேன். ஏனென்றால், ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வதற்கே ஒன்பது முறை யோசிக்கும் குணாதிசயம்கொண்டவர் ரஜினி. உண்மையிலேயே அரசியலில் இறங்க வேண்டும் என்று தீவிரமாக முடிவெடுத்து வந்தால், தமிழக மக்களுக்கு நிச்சயம் நல்லதே செய்வார். என்னை அவருடைய கட்சியில் சேர்த்துக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. பின்னால் இருந்து அவரை வாழ்த்துவேன், பாராட்டுவேன்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism