Published:Updated:

உதய்பூர் சம்பவம்: ``யாராக இருந்தாலும் சரி, தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட வேண்டும்" - அசாதுதீன் ஒவைசி

அசாதுதீன் ஒவைசி

``சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, முட்டாள்தனமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான செயல்களைச் செய்ய யாருக்கும் உரிமை இல்லை." - அசாதுதீன் ஒவைசி

உதய்பூர் சம்பவம்: ``யாராக இருந்தாலும் சரி, தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட வேண்டும்" - அசாதுதீன் ஒவைசி

``சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, முட்டாள்தனமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான செயல்களைச் செய்ய யாருக்கும் உரிமை இல்லை." - அசாதுதீன் ஒவைசி

Published:Updated:
அசாதுதீன் ஒவைசி

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில், நபிகள் நாயகம் குறித்து பாஜக-வின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா கூறிய கருத்தை ஆதரித்து ஃபேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டதாக, நேற்று டெய்லர் ஒருவரை இரண்டு பேர் தலை துண்டித்துக் கொலை செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவத்தில் கொலையாளிகளான கவுஸ் முகமது, ரியாஸ் முகமது ஆகியோர் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கொலை செய்த கவுஸ் முகமது மற்றும் ரியாஸ் முகமது
கொலை செய்த கவுஸ் முகமது மற்றும் ரியாஸ் முகமது

இந்த நிலையில், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவரும், எம்.பி-யுமான அசாதுதீன் ஒவைசி, நாட்டில் இது போன்ற தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக தனியார் ஊடகத்தில் பேசிய ஒவைசி, ``உதய்பூரில் அந்த ஏழை டெய்லருக்கு நடந்ததை மிகக் கடுமையாகக் கண்டிக்கிறேன். ஆனால், அதேசமயம் சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான், ஜெய்ப்பூரில் நடந்த எல்லாவற்றையும் கண்டிக்க வேண்டும். தீவிரவாதம் இங்கு கட்டுப்படுத்தப்பட வேண்டும். இதன் காரணமாகத்தான் நான், நாட்டில் நடக்கும் தீவிரமயமாக்கலைக் கண்காணிக்க, தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு, குறிப்பிட்ட மதத்துக்கு மட்டுமல்லாமல், ஒவ்வொரு மதத்துக்கும் இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அசாதுதீன் ஒவைசி
அசாதுதீன் ஒவைசி

இவர்கள் செய்தது மிகக் கொடூரமான செயல். நிச்சயமாக இது சந்தேகத்துக்கு இடமின்றி கண்டிக்கப்பட வேண்டும். சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, முட்டாள்தனமான, காட்டுமிராண்டித்தனமான செயல்களைச் செய்ய யாருக்கும் உரிமை இல்லை" எனக் கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய ஒவைசி, ``சாதி, மதம், அரசியல் அல்லது வேறு எதுவாக இருந்தாலும் யாரேனும் வன்முறை நிகழ்த்தினால் கண்டிக்கப்பட வேண்டும். மேலும் வன்முறையில் ஈடுபடுபவர்கள் அனைவருக்கும் சட்டம் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இதற்குத்தான் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்ட வேண்டும் என்று கோரிவருகிறோம்" எனத் தெரிவித்தார்.