Published:Updated:

ரஃபேல் சக்கரத்தில் எலுமிச்சம்பழம்... சமூக வலைதளங்களில் சூடுபறக்கும் விவாதங்கள்!

ரஃபேல் ட்ரெண்டிங் ( vikatan )

ரஃபேல் விமானத்துக்கு நடத்தப்பட்ட பூஜையில், விமானச் சக்கரங்களுக்கு அடியில் எலுமிச்சம்பழம் வைக்கப்பட்டது. இந்துமதக் குறியீடு வரையப்பட்டது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் இருதரப்பு விவாதங்கள் அனல்பறக்கின்றன. ட்விட்டரில் #RafalePujaPolitics ஹேஷ்டேக்தான் ட்ரெண்டிங்கில் உள்ளது.

ரஃபேல் சக்கரத்தில் எலுமிச்சம்பழம்... சமூக வலைதளங்களில் சூடுபறக்கும் விவாதங்கள்!

ரஃபேல் விமானத்துக்கு நடத்தப்பட்ட பூஜையில், விமானச் சக்கரங்களுக்கு அடியில் எலுமிச்சம்பழம் வைக்கப்பட்டது. இந்துமதக் குறியீடு வரையப்பட்டது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் இருதரப்பு விவாதங்கள் அனல்பறக்கின்றன. ட்விட்டரில் #RafalePujaPolitics ஹேஷ்டேக்தான் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Published:Updated:
ரஃபேல் ட்ரெண்டிங் ( vikatan )

பிரான்ஸ் நாட்டுடன் இந்தியா செய்துகொண்ட ஒப்பந்தப்படி, முதலாவது ரஃபேல் போர் விமானத்தை நமக்கு வழங்கியுள்ளது. இதற்கான விழா, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று நடைபெற்றது. அதில், இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்துகொண்டார். புதிய விமானத்துக்கு இந்து மத முறைப்படி பூஜை போடப்பட்டு, சக்கரத்துக்கு அடியில் எலுமிச்சம்பழம் வைக்கப்பட்டது. ரஃபேல் விமானத்தின்மீது பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்து மதக்குறியீட்டை வரைந்தார். தற்போது, இந்தப் பூஜை குறித்து, நாடு முழுவதும் பெரிய விவாதமாகியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சமூக வலைதளத்தில், இதுகுறித்து இருதரப்பு விவாதங்கள் அனல்பறக்கின்றன. ட்விட்டரில் #RafalePujaPolitics ஹேஷ்டேக்தான் ட்ரெண்டிங்கில் உள்ளது. புதிய விமானத்துக்கு பூஜை போட்டதை அரசியலாக்கத் தேவையில்லை. ஆட்டோ, கார், பைக் என எந்த வாகனம் வாங்கினாலும் பூஜை போடுவது காலங்காலமாக நம் பண்பாடு. அதேபோல விமானத்துக்கும் செய்வது தவறல்ல. இது இந்தியக் கலாசாரத்தின் ஒரு பகுதிதான் என்று, இந்தப் பூஜைக்கு ஆதரவாகப் பலர் ட்வீட் செய்துள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தப் பூஜையை இந்தியப் பண்பாடு எனக்கூறுபவர்கள், விமானம் வாங்குவதற்கான பணம், இந்துக்கள் மட்டுமல்லாது, கிறிஸ்தவர், முஸ்லிம், ஜெயின், சீக்கியர் எனப் பல்வேறு மதத்தவரும் வரி செலுத்தியதால் கிடைத்தது என்பதை நினைவில்கொள்ள வேண்டும். அப்படியிருக்கும்போது, மத்திய அரசு ஏன் இந்து மத முறையை மட்டும் பின்பற்றுகிறது என்று எதிர்த் தரப்பினரால் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இன்னொருவரோ, முன்பு ஏ.கே. அந்தோணி பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோது கிறிஸ்தவ மதக்குறியீட்டை வரைந்தால் ஏற்றுக்கொள்வோமா என்றும் கேட்டிருந்தார்.

ரஃபேல் விமானத்தில் ஊழல் நடந்துள்ளதாக முதலில் காங்கிரஸ் புகாரளித்தது. பின்னர், அதே ரஃபேல் விமானத்தைத் தனது தேர்தல் வெற்றிக்காக பா.ஜ.க பயன்படுத்தியது. தற்போது அதே ரஃபேல் விமானத்தை வைத்து புனைவுக்கும் அறிவியலுக்குமிடையே விவாதம் நடக்கிறது என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவாதங்களுக்கிடையே ஒருவர், 'இந்தியாவுக்கு முதலாவது ரஃபேல் விமானத்தை பிரான்ஸ் அளித்துவிட்டது. நீங்கள் விமானத்தின்மீது தேங்காய் உடைத்துவிட்டதால் வாரண்டி கிடையாது' என்று பிரான்ஸ் கூறிவிட்டால் என்னாவது என்று நகைச்சுவையாகவும் ட்வீட் செய்துள்ளார். இந்தியாவைக் காப்பாற்ற ரஃபேல் விமானத்தை வாங்கினோம். ரஃபேல் விமானத்தைக் காப்பாற்ற எலுமிச்சம்பழத்தை வாங்கினோம் என்று இன்னொருவர் நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.

காங்கிரஸைச் சேர்ந்த சந்தீப் தீட்சித் தனது ட்வீட்டில், ரஃபேல் விமானத்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சியைக்கூட மோடி அரசாங்கம் காவிமயமாக்கியுள்ளது. சொல்லும்படியாக எந்த வேலையையும் பார்க்காமல் அனைத்தையும் நாடகமாக்குவதே இவர்களின் செயலாக உள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

ஒரேயொரு விமானத்தை நாம் வாங்கியதற்கே இவ்வளவு விவாதங்கள் என்றால், மற்ற ரஃபேல் விமானங்களையும் வாங்கும்போது எத்தகைய விவாதங்கள் களைகட்டும் என நினைத்தால் இப்போதே கண்ணைக்கட்டுகிறது!