Published:Updated:

`வேலை எங்கே என்று கேட்டால் நிலவைக் கைகாட்டுவதா?’ - மத்திய அரசு மீது ராகுல் விமர்சனம்

ரூ.5.50 லட்சம் கோடி கடன் தொகையை 15 வசதிபடைத்தவர்களுக்காக மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது

ராகுல்காந்தி
ராகுல்காந்தி

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடாமல், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாக பா.ஜ.க ராகுல்காந்தி மீது குற்றம்சாட்டியிருந்தது. கம்போடியா சென்றிருந்த ராகுல்காந்தி சமீபத்தில் தாயகம் திரும்பினார். மகராஷ்ட்ராவில் உள்ள 288 தொகுதிகளுக்கும் 21-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் 24-ம் தேதி வெளியிடப்படுகின்றன.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

பா.ஜ.க அங்கு ஏற்கெனவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டது. வெளிநாட்டிலிருந்து திரும்பியுள்ள ராகுல்காந்தி, முதல்முறையாக லட்டூரில் மாவட்டத்தில் உள்ள அவுசா நகரில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார். காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்து ஐந்து மாதங்களுக்கு மேலான நிலையில், இதுவே, அவர் பங்கேற்ற முதல் பொதுக்கூட்டமாகும். கூட்டத்தில் பேசிய, அவர் மத்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பிரசாரத்தில் பேசிய ராகுல்காந்தி, ``பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஊடகங்கள் ஆகியவை மக்களை முக்கியமான பிரச்னைகளிலிருந்து திசை திருப்பிவிடுகின்றன.

நேரு, `அங்கிள்' ராகுல், மோடி, 40 நூறு ரூபாய்..! - மாமல்லபுரம் சீனியர் கைடின் நினைவுகள்

மத்திய அரசிடம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு குறித்து கேட்கும்போது, `நிலவைப் பாருங்கள்’ என்று சந்திரயான் -2 ஐ அவர்களுக்கு கைகாட்டுகிறது இந்த அரசாங்கம். மோடி, சீன அதிபர் ஜின் ஜிங் பிங் சந்திப்பில் 2017 டோக்லாம் நிலைப்பாடு பற்றிய கடிதம் குறித்தும், 2017-ம் ஆண்டு இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடூருவியது குறித்தும் மோடி பேசினாரா என்பது தெரியவேண்டும். ரூ.5.50 லட்சம் கோடி கடன் தொகையை 15 வசதி படைத்தவர்களுக்காக பிரதமர் மோடி அரசு தள்ளுபடி செய்துள்ளது” என்றார். தொடர்ந்து பேசிய அவர், ``ஊடகங்கள் நாட்டின் வேலையின்மை, விவசாயிகள் பிரச்னைகள் உள்ளிட்டவற்றை குறித்து மௌனமாக இருக்கின்றன.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

அதேபோல பணம்படைத்தவர்களுக்கு தள்ளுபடி செய்யபட்ட கடன் தொகை குறித்து ஊடகங்கள் பேச மறுக்கின்றன. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி நடைமுறை போன்றவை சாமானிய மக்களின் சட்டைப்பையில் இருந்து பணத்தை எடுத்து பணக்காரர்களிடம் கொடுக்கும் செயல்தான். காஷ்மீரில் ரத்து செய்யப்பட்ட சட்டப்பிரிவு 370 குறித்தும், சந்திராயன்-2 குறித்து மட்டுமே மத்திய அரசு பேசிவருகிறது. ஆனால், நாட்டுக்கு தொல்லை கொடுக்கும் பல்வேறு பிரச்னைகள் குறித்து மோடி தலைமையிலான அரசு பேச மறுக்கிறது” என குற்றம்சாட்டினார்.