Published:Updated:

``பிற நாட்டவர்களோடு பேச இந்தி பயன்படாது, ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்..." - ராகுல் காந்தி

ராகுல் காந்தி

``ஏழை மாணவர்கள் ஆங்கிலம் படிக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. ஏனெனில், பிற நாட்டவர்களோடு பேச இந்தி பயன்படாது. .'' - ராகுல் காந்தி

``பிற நாட்டவர்களோடு பேச இந்தி பயன்படாது, ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்..." - ராகுல் காந்தி

``ஏழை மாணவர்கள் ஆங்கிலம் படிக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. ஏனெனில், பிற நாட்டவர்களோடு பேச இந்தி பயன்படாது. .'' - ராகுல் காந்தி

Published:Updated:
ராகுல் காந்தி

பாரத் ஜோடோ யாத்திரை 100 நாள்களைக் கடந்து நடந்துகொண்டிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம், அல்வாரில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரை பேரணியில் ராகுல் காந்தியுடன் ராஜஸ்தானின் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கப்படுவதை பா.ஜ.க தலைவர்கள் விரும்புவதில்லை. ஆனால், பா.ஜ.க தலைவர்களின் குழந்தைகள் அனைவரும் ஆங்கில வழிக் கல்வியைப் படித்துவருகிறார்கள். உண்மை என்னவென்றால் ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரின் குழந்தைகள் ஆங்கிலம் கற்கக் கூடாது என்பதுதான் பா.ஜ.க தலைவர்களின் விருப்பம்.

பாஜக - அமித் ஷா, மோடி
பாஜக - அமித் ஷா, மோடி

ஏழை விவசாயிகள், தொழிலாளர்களின் குழந்தைகள் பெரிய கனவு காணக் கூடாது. அவர்கள் பரம்பரைத் தொழிலிருந்து வெளியேறிவிடக் கூடாது என்பதுதான் அவர்களின் எண்ணம். ஏழை மாணவர்கள் ஆங்கிலம் படிக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. ஏனெனில், பிற நாட்டவர்களோடு பேச இந்தி பயன்படாது. ஆங்கிலம்தான் பயன்படும். ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரின் குழந்தைகளும் ஆங்கிலம் கற்க வேண்டும். அமெரிக்கர்களோடு போட்டியிட்டு அவர்களை வெற்றிகொள்ள வேண்டும். அதற்கு அவர்களின் மொழியில் பேச நமது குழந்தைகளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். ராஜஸ்தானிலுள்ள காங்கிரஸ் அரசு 1,700 ஆங்கிலவழிப் பள்ளிகளைத் திறந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.