Published:Updated:

பஞ்சாப் தேர்தல்: ``யார் தீவிரவாதி என்று பிப்ரவரி 20-ல் தெரியும்" - ராகுலுக்கு, கெஜ்ரிவால் பதிலடி!

அரவிந்த் கெஜ்ரிவால்

`ராகுல் காந்தி என்னை தீவிரவாதி என்கிறார். யார் தீவிரவாதி என்று பிப்ரவரி 20-ம் தேதி அவர் அறிந்துகொள்வர்' என ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார்.

பஞ்சாப் தேர்தல்: ``யார் தீவிரவாதி என்று பிப்ரவரி 20-ல் தெரியும்" - ராகுலுக்கு, கெஜ்ரிவால் பதிலடி!

`ராகுல் காந்தி என்னை தீவிரவாதி என்கிறார். யார் தீவிரவாதி என்று பிப்ரவரி 20-ம் தேதி அவர் அறிந்துகொள்வர்' என ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார்.

Published:Updated:
அரவிந்த் கெஜ்ரிவால்

பஞ்சாப் மாநிலத்திலுள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக வருகின்ற பிப்ரவரி 20-ம் தேதி நடைபெறவுள்ளது. பஞ்சாப் தேர்தல் களம் மும்முனை போட்டியாக, நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மேலும், தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி, மோடி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில், நேற்று காங்கிரஸ் கட்சி சார்பாக பர்னாலாவில் நடந்த தேர்தல் பரப்புரையில் பேசிய ராகுல் காந்தி, ``ஆம் ஆத்மியின் மிகப்பெரியத் தலைவரை தீவிரவாதிகளின் வீடுகளில் காணலாம்" என அரவிந்த் கெஜ்ரிவாலை மறைமுகமாகச் சாடியிருந்தார்.

ராகுல் காந்தி - காங்கிரஸ்
ராகுல் காந்தி - காங்கிரஸ்

இந்த நிலையில், இன்று மொஹாலியில் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், ராகுல் காந்தியின் பேச்சுக்கு பதிலடி தரும் விதமாக அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லியின் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். இது தொடர்பாகப் பேசிய அவர், ``ராகுல் காந்தி என்னை தீவிரவாதி என்கிறார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

யார் தீவிரவாதி என்பதை பிப்ரவரி 20-ம் தேதி அவர் தெரிந்துகொள்வார். ஆளும் காங்கிரஸ் பஞ்சாப்பில் உள்ள வணிகர்களையும், சாதாரண மக்களையும் அச்சுறுத்துகிறது. மக்களிடத்தில் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேட்டால்கூட பதில் கூற மக்கள் அச்சப்படுகிறார்கள்" என காங்கிரஸை கடுமையாகச் சாடினார்.