Published:Updated:

கொரோனா மரண எண்ணிக்கை: ``அறிவியல் பொய் சொல்லாது... ஆனால் பிரதமர் மோடி பொய் சொல்வார்!" - ராகுல் காந்தி

ராகுல் காந்தி - மோடி

``அறிவியல் பொய் சொல்லாது, ஆனால் பிரதமர் மோடி பொய் சொல்வார்'' என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

கொரோனா மரண எண்ணிக்கை: ``அறிவியல் பொய் சொல்லாது... ஆனால் பிரதமர் மோடி பொய் சொல்வார்!" - ராகுல் காந்தி

``அறிவியல் பொய் சொல்லாது, ஆனால் பிரதமர் மோடி பொய் சொல்வார்'' என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

Published:Updated:
ராகுல் காந்தி - மோடி

உலக சுகாதார அமைப்பு கொரோனாவால் இறந்தவர்களின் புள்ளிவிவரத்தை கடந்த வியாழக்கிழமையன்று வெளியிட்டது. அந்தக் கணக்கீட்டின்படி, 2021-ம் ஆண்டின் முடிவில் உலகம் முழுவதும் கொரோனாவால் ஒரு கோடியே 50 லட்சம் பேர் இறந்துள்ளதாகத் தெரிகிறது. அதில், ``இந்தியாவில் 2021, டிசம்பர் 31 வரை 4.8 லட்சம் பேர் கொரோனாவால் இறந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் அது 47 லட்சமாக இருக்கலாம்" என உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது. அதனால், இந்த விவகாரம் இந்தியாவில் பேசுபொருளாக மாறியது.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், ``இந்தியாவில் கொரோனாவால் 47 லட்சம் இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால், மோடி தலைமையிலான அரசாங்கம் 4.8 லட்சம் பேர்தான் உயிரிழந்தனர் எனப் பொய் சொல்கிறது. அறிவியல் பொய் சொல்லாது... ஆனால் பிரதமர் மோடி பொய் சொல்வார். அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு மதிப்பளித்து அவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்'' எனப் பதிவிட்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism