Published:Updated:

"ராகுல் காந்தி யாத்திரையில் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவில்லை"- டெல்லி காவல்துறை குற்றச்சாட்டு

பாரத் ஜோடோ யாத்திரை

ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையின்போது பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதாக டெல்லி காவல்துறை குற்றம்சாட்டியிருக்கிறது.

"ராகுல் காந்தி யாத்திரையில் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவில்லை"- டெல்லி காவல்துறை குற்றச்சாட்டு

ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையின்போது பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதாக டெல்லி காவல்துறை குற்றம்சாட்டியிருக்கிறது.

Published:Updated:
பாரத் ஜோடோ யாத்திரை

ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்றுவரும் பாரத் ஜோடோ யாத்திரை, கடந்த 24-ம் தேதி டெல்லியில் நுழைந்தது. இந்த நிலையில், "பாரத் ஜோடோ யாத்திரை டெல்லிக்குள் நுழைந்ததைத் தொடர்ந்து, பல சந்தர்ப்பங்களில் ராகுல் காந்தியின் பாதுகாப்பில் சமரசம் செய்யப்பட்டிருக்கிறது. அதிகரிக்கும் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசின் பாதுகாப்பு வீரர்கள் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டனர். நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால், காங்கிரஸ் தொண்டர்களும், ராகுல் காந்தியுடன் நடந்து செல்பவர்களும் பாதுகாப்பு சுற்றுச்சுவரை அமைக்கவேண்டியிருந்தது" என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அண்மையில் கடிதம் எழுதியிருந்தார்.

பாரத் ஜோடோ யாத்திரை
பாரத் ஜோடோ யாத்திரை

இந்த நிலையில் CRPF (துணை ராணுவப் படை) அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்து, "ராகுல் காந்தி வருகையின்போது தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை சி.ஆர்.பி.எஃப், மாநில காவல்துறை, பாதுகாப்பு ஏஜென்சி ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து, அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யாத்திரையின்போது, ராகுல் காந்திதான் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மீறினார். இந்த உண்மை அவருக்கு அவ்வப்போது சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது" என பதிலளித்திருந்தது.

டெல்லி
டெல்லி

அதைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சகம் டெல்லி காவல்துறையிடம் காங்கிரஸின் புகார் குறித்து அறிக்கை கேட்டது. இதற்கு பதிலளித்திருக்கும் டெல்லி காவல்துறை, "டெல்லியில் சாதாரணச் சீருடையில் ஏராளமான போலீஸாரை நியமித்திருந்தோம். அவர்கள் ராகுல் காந்திக்குப் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தினர். அவருக்கும் போதுமான பாதுகாப்பு வழங்கப்பட்டுவருகிறது. ஆனால், யாத்திரையில் ராகுல் காந்தி பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவில்லை" எனக் குற்றம்சாட்டியிருக்கிறது.