Published:Updated:

ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை; எம்.பி பதவிக்கு ஆபத்தா!? - கபில் சிபல் சொல்வதென்ன?

கபில் சிபல்

`` ராகுல் காந்தி இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்றிருப்பது முற்றிலும் வினோதமானது." - கபில் சிபல்

Published:Updated:

ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை; எம்.பி பதவிக்கு ஆபத்தா!? - கபில் சிபல் சொல்வதென்ன?

`` ராகுல் காந்தி இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்றிருப்பது முற்றிலும் வினோதமானது." - கபில் சிபல்

கபில் சிபல்

பிரதமர் மோடியின் பெயரை அவதூறாகப் பயன்படுத்தியதாக ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்தி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த நீதிபதி வர்மா, ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 30 நாள்கள் அவகாசம் வழங்கி, ஜாமீனும் வழங்கினார்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மத்திய பா.ஜ.க அரசை நோக்கி கடும் கண்டனங்களைப் பதிவு செய்துவருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் காங்கிரஸ் உறுப்பினரும், முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் செய்தியாளர்களிடம், "சூரத் நீதிமன்றத்தின் தண்டனையால் ராகுல் காந்தி நாடாளுமன்றப் பதவியிலிருந்து தானாகவே தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ஏனென்றால், லில்லி தாமஸ் வெர்சஸ் யூனியன் ஆஃப் இந்தியா வழக்கில், 2013-ல் உச்ச நீதிமன்றம், 'குற்றத்தில் ஈடுபட்டு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி உடனடியாக அவர்களின் உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும்' என்று தீர்ப்பளித்தது. `எதாவதொரு குற்றத்தில் ஈடுபட்ட ஒருவர், இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்றால், அந்தப் பதவிக்கான இடம் காலியாக இருக்கும்’ என்றும் சட்டம் கூறுகிறது. எனவே, நீதிமன்றம் தண்டனையை மட்டும் நிறுத்திவைத்தால் போதாது.

இடைநீக்கம் அல்லது தண்டனைக்குத் தடை விதிக்க வேண்டும். தண்டனைக்குத் தடை விதிக்கப்பட்டால் மட்டுமே ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்க முடியும். இதற்கு முன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய மூன்று மாதங்களுக்கு அனுமதித்த மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8(4) ஐ நீதிமன்றம் ரத்து செய்தது. இது அரசியலமைப்புக்கு எதிரானது.

மோடி - கபில் சிபல்
மோடி - கபில் சிபல்
ட்விட்டர்

இன்னும் சொல்வதானால், ராகுல் காந்தி இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்றிருப்பது முற்றிலும் வினோதமானது. இந்த வழக்கு ஒரு சமூகத்துக்கு எதிராக ராகுல் காந்தி பேசியதால் தொடுக்கப்பட்டதல்ல. அது ஒரு தனிநபருக்கு எதிரான வழக்காகவே கருதுகிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.