Published:Updated:

``ராகுல் காந்தி பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கிறார்..."- அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ( ட்விட்டர் )

``ராகுல் காந்தி, இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்று கூறுவதன் மூலம் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கிறார்" என அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா சாடியுள்ளார்.

`பாஞ்சன்யா’ எனும் வார இதழ் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஹிமந்தா பிஸ்வா, ``இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியமாக அடையாளப்படுத்துவதென்பது நம்முடைய 5,000 ஆண்டுகள் பழைமையான, வளமான நாகரிகத்துக்கே சவால்விடுவதற்குச் சமம். இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்றால், நீங்கள் இந்தியாவை எதிர்த்து பேசுகிறீர்கள் என்று அர்த்தம்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இதுபோலவே தற்போது ராகுல் காந்தி, இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்று கூறுவதன் மூலம் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கிறார். அவரின் இத்தகைய பேச்சுக்கும், தீவிரவாத அமைப்பான உல்ஃபாவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை" என ராகுல் காந்தியைச் சாடினார்.

மேலும் தொடர்ந்து பேசிய ஹிமந்தா பிஸ்வா, ``காங்கிரஸில் அவர்களின் குடும்பத்தைத் தாண்டி எதுவுமே இல்லை. ஆனால் உங்களைவிட இந்தியா பெரியது என்று அவர்களிடம் சொன்னால் காங்கிரஸில் வேலை போய்விடும்" எனக் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism