நேஷனல் ஹெரால்டு ஊழல் வழக்கில், ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறையில் முன்னதாக வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி, சோனியா காந்தியிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. பின்னர் கொரோனா பாதிப்பு காரணமாக சோனியா காந்தி விசாரணைக்கு ஆஜராவது தாமதமானது.

ராகுல் காந்தியிடம் மட்டும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி முடித்தனர். இந்த நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவந்திருக்கும் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி விசாரணையின் முதல் நாளாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோனியா காந்தி நேற்று ஆஜரானார். இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று போராட்டம் நடத்தினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைதுசெய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில் இரண்டாம் நாளாக விசாரணைக்கு சோனியா காந்தி இன்று ஆஜரான நிலையில், மீண்டும் அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிராக ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் கட்சியினர் பலரும் பேரணி நடத்தினர். ஏற்கெனவே போராட்டம் நடத்திவந்த காங்கிரஸ் கட்சியினரை போலீஸார் கைதுசெய்துவந்த நிலையில், தற்போது பேரணியில் கலந்துகொண்ட ராகுல் காந்தியையும் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.