Published:Updated:

``புகைப்படம் எடுப்பதற்கும், தர்ணா நடத்துவதற்கும்தான் ராகுல் சரியானவர்..!"- குலாம் நபி ஆசாத் தாக்கு

ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத்

``இதில் யாரைக் குறை கூறுவது? முதலில் எல்லாவற்றையுமே ஒரு கடிதத்தில் எழுதிவிட்டுச் செல்வதே என்னுடைய நோக்கமாக இருந்தது." - குலாம் நபி ஆசாத்

``புகைப்படம் எடுப்பதற்கும், தர்ணா நடத்துவதற்கும்தான் ராகுல் சரியானவர்..!"- குலாம் நபி ஆசாத் தாக்கு

``இதில் யாரைக் குறை கூறுவது? முதலில் எல்லாவற்றையுமே ஒரு கடிதத்தில் எழுதிவிட்டுச் செல்வதே என்னுடைய நோக்கமாக இருந்தது." - குலாம் நபி ஆசாத்

Published:Updated:
ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத்

காங்கிரஸ் ஒருபக்கம், கட்சி மறுகட்டமைப்பு, கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்தல் என 2024 லோக் சபா தேர்தலுக்குத் தயாராகிவரும் நிலையில், கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் திடீரென கட்சியிலிருந்து விலகினார். இது காங்கிரஸுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் குலாம் நபி ஆசாத், காங்கிரஸிலிருந்து விலகியதோடு மட்டுமல்லாமல், புதிதாகக் கட்சி ஒன்றைத் தொடங்கப்போவதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் குலாம் நபி ஆசாத், சோனியா காந்திக்கு எழுதிய தன்னுடைய ராஜினாமா கடிதத்தில், ``2014-ம் ஆண்டு தேர்தலில் அடைந்த தோல்விக்கு ராகுல் காந்தியின் சிறுபிள்ளைத்தன செயல்களே காரணம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத்
ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத்

மேலும், காங்கிரஸில் ராகுல் காந்தியின் வருகைக்குப் பிறகு மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டதாகவும், கட்சி விவகாரத்தில் ராகுல் காந்தியின் P.A(Personal Assistants) கூட முடிவெடுப்பார்கள் எனக் குலாம் நபி ஆசாத் கூறிவந்தார்.

இந்த நிலையில், தனியார் ஊடகத்தின் கலந்துரையாடலில் பேசிய குலாம் நபி ஆசாத், மீண்டும் ராகுல் காந்தியை விமர்சித்திருக்கிறார். அதில் காங்கிரஸுடனான முறிவு குறித்துப் பேசிய குலாம் நபி ஆசாத், ``இதில் யாரைக் குறை கூறுவது? முதலில் எல்லாவற்றையுமே ஒரு கடிதத்தில் எழுதிவிட்டுச் செல்வதே என்னுடைய நோக்கமாக இருந்தது. ஆனால், ராகுல் காந்தி எந்த முயற்சியும் எடுக்காததால்தான் அவரைக் குற்றம் சொல்ல வேண்டியிருந்தது.

குலாம் நபி ஆசாத்
குலாம் நபி ஆசாத்

மேலும், கட்சியினர் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி என்னைத் தூண்டிவிட முயன்றனர். ராகுல் காந்திக்குக் கட்சியை மறுகட்டமைப்பு செய்வதில் கவனம் இல்லை. புகைப்படம் எடுப்பதற்கும், தர்ணாக்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்குத்தான் அவர் சரியானவர்" என விமர்சித்தார்.

காங்கிரஸில் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் அக்டோபர் 17-ம் தேதி நடத்தப்படுவதாக முடிவாகியிருக்கும் நிலையில் குலாம் நபி ஆசாத், தொடர்ந்து ராகுல் காந்திமீது விமர்சனங்களை முன்வைத்துவருகிறார். மேலும் ஒருபுறம், ராகுல் காந்தியே மீண்டும் காங்கிரஸின் தலைவராகப் பொறுப்பேற்கவேண்டும் எனக் கட்சிக்குள்ளே பலரும் கூறிவருகின்றனர்.