இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே செல்கிறது. அதனால் ஏழை, எளிய மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதை கண்டித்து காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், பிரதமர் மோடியை விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``பிரதமர் மோடியின் தினசரி வேலை பட்டியலில், பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை உயர்த்துவது, இளைஞர்களிடம் எப்படி வெற்றுக் கனவுகளை உருவாக்குவது? இன்று எந்த பொதுத்துறை நிறுவனத்தை விற்பனை செய்வது, விவசாயிகளை மேலும் எப்படி ஆதரவற்றவர்களாக ஆக்குவது? என்பவைதான் இடம் பெற்றுள்ளன” என்று `RozSubahKiBaat' என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டிருக்கிறார்.
