Published:Updated:

மத்திய அரசுக்கு எதிரான போராட்டம்... ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி-க்கள் கைது!

போராட்டத்தில் ராகுல் காந்தி ( ட்விட்டர் )

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி-க்கள் கறுப்பு உடை அணிந்து, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.

பணவீக்கம், விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி மற்றும் வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்னைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர்கள் நாடு தழுவிய போராட்டத்தை நடத்திவருகின்றனர். அதைத் தொடர்ந்து, டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி-க்கள் கறுப்பு உடை அணிந்து, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். மேலும், ராஷ்டிரபதி பவனை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.

ஆனால், டெல்லி காவல்துறை இந்தப் போராட்டத்துக்கு அனுமதி மறுத்து, துணை ராணுவப் படையினரும், டெல்லி போலீஸாரும் விஜய் சவுக் சாலை மற்றும் நாடாளுமன்றத்திலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் செல்லும் பாதையில் தடுப்புகள் மூலம் தடுத்து நிறுத்தினர்.

போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி-க்கள்
போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி-க்கள்
ட்விட்டர்

ஆனாலும், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அங்கேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து, போராட்டம் நடத்திய ராகுல் காந்தி, பிரியாங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி-க்களைக் கைதுசெய்திருக்கின்றனர். இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ``இந்தியாவில் இப்போது ஜனநாயகம் இல்லை, நம் நாடு நான்கு பேரின் சர்வாதிகாரத்தில் இருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!