Published:Updated:

``சந்திரசேகர ராவ் கட்சியுடன் கூட்டணியா... வாய்ப்பே இல்லை!" - தெலங்கானாவில் ராகுல் திட்டவட்டம்

ராகுல் காந்தி ( Twitter )

`` தெலங்கானா அரசு பட்டியலின மக்களிடமிருந்து நிலத்தை அபகரிக்கிறது. பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்கள் மூலம் பணத்தைச் சுரண்டுகிறது." - ராகுல் காந்தி

``சந்திரசேகர ராவ் கட்சியுடன் கூட்டணியா... வாய்ப்பே இல்லை!" - தெலங்கானாவில் ராகுல் திட்டவட்டம்

`` தெலங்கானா அரசு பட்டியலின மக்களிடமிருந்து நிலத்தை அபகரிக்கிறது. பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்கள் மூலம் பணத்தைச் சுரண்டுகிறது." - ராகுல் காந்தி

Published:Updated:
ராகுல் காந்தி ( Twitter )

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை இலக்காகக்கொண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை `பாரத் ஜோடோ' யாத்திரையை மேற்கொண்டுவருகிறார்.

இந்த நிலையில், திங்கள்கிழமை தெலங்கானாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ``தெலங்கானா அரசு பட்டியலின மக்களிடமிருந்து நிலத்தை அபகரிக்கிறது. பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்கள் மூலம் பணத்தைச் சுரண்டுகிறது.

தெலங்கானா முதல்வர் கேசிஆர்
தெலங்கானா முதல்வர் கேசிஆர்

கல்வி முறையை தனியார்மயமாக்கி அழித்துவருகிறது. தெலங்கானாவில் ஆட்சியில் இருக்கும் கே.சி.ஆர் தலைமையிலான அரசுக்கும், பா.ஜ.க தலைமையிலான மத்திய நிர்வாகத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. தெலங்கானா முதல்வர், தான் ஒரு தேசியக் கட்சியை நடத்துவதாக நம்புகிறார். அவர் ஒரு சர்வதேசக் கட்சியை நடத்துவதாக நினைப்பதுகூட வரவேற்கத்தக்கதுதான். ஆனால்ம், அவர் விவசாயிகள், வேலையில்லா இளைஞர்கள் மற்றும் பிற தரப்பு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டார்.

ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை
ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை

பி.ஆர்.எஸ்., காங்கிரஸுக்கு இடையே எந்தவிதமான உறவும் இல்லை. எப்போதும் அவர்களுடன் கூட்டணிக்கான வாய்ப்பே இல்லை. பி.ஆர்.எஸ்., பா.ஜ.க ஆகிய கட்சிகள் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். மசோதாக்களை நிறைவேற்றுவதில் பி.ஆர்.எஸ் கட்சி மத்திய பா.ஜ.க-வுக்கு ஆதரவளித்திருக்கிறது" என்றார்.