Published:Updated:

`மோடியைப் பார்த்து நான் பயப்படவில்லை; என்னைத் தொட முடியாது!’ - ராகுல் காந்தி

 ராகுல் காந்தி
ராகுல் காந்தி ( ANI )

புதிய வேளாண் சட்டங்கள் இந்தியாவின் விவசாயத்தை அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து காங்கிரஸ் சார்பில் `Murder of agriculture’ என்ற புத்தகத்தை டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ராகுல்காந்தி இன்று வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல்,``புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்களும் இந்தியாவின் விவசாயத்தை அழிக்க உருவாக்கப்பட்டுள்ளது.

புத்தக வெளியீடு
புத்தக வெளியீடு
ANI

நான் போராடும் விவசாயிகளை ஆதரிக்கிறேன். ஒவ்வொரு தனிமனிதரும் போராடும் விவசாயிகளை ஆதரிக்கவேண்டும். காரணம் அவர்கள் நமக்காகப் போராடுகிறார்கள். இந்த அரசு பிரச்னைகளை மறைத்து, நாட்டுக்குத் தவறான தகவல்களை வழங்குகிறது. அந்த சோகத்தின் ஒரு பகுதி மட்டுமே என்பதால், நான் விவசாயிகளைப் பற்றி மட்டும் பேசப்போவதில்லை.

இளைஞர்களுக்கு இது முக்கியமானது. இது அவர்களின் நிகழ்காலம் மட்டுமல்லாது, அவர்களின் எதிர்காலம் தொடர்புடையது. நாம் அரசி, கோதுமை இந்த விலையில் வாங்க தற்போதிருக்கும் விவசாய உற்பத்தி சந்தைக் குழு மற்றும் விவசாய முறைதான் காரணம். இது விவசாயிகளின் மீது மட்டும் நடத்தப்படும் தாக்குதல் இல்லை. நடுத்தர மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல். வேலை கிடைக்காமல் இருக்கும் இளைஞர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது தான் ஒரே தீர்வாக இருக்கும் - ராகுல் காந்தி

விமான நிலையம், தொலைத்தொடர்பு, மின்சாரம் என இன்று ஒவ்வொரு தொழில்துறையும் மூன்று முதல் ஐந்து தொழிலதிபர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. தற்போது, இந்த வேளாண் சட்டங்களின் மூலம், மொத்த விவசாயத் துறையின் மூன்று அல்லது நான்கு பெரு முதலாளிகளுக்கு வழங்க இந்த மோடி அரசு விரும்புகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வேளாண் சட்டங்கள்: உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை; புதிய குழு - விவசாயிகளுக்கு நீதி கிடைக்குமா?

நமது நாட்டின் மிகப்பெரிய தொழில் விவசாயம்தான். நம்மில் 60 சதவிகிதம் நபர்கள் வேளாண் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுவருகிறோம். இந்த மூன்று வேளாண் சட்டங்கள் இந்தியாவின் விவசாயத்தை அழித்திடும். இந்தியாவில் உள்ள எந்த விவசாயியும் தன்னை காப்பாற்றிக்கொள்ள நீதிமன்றத்திற்குச் செல்லமுடியாது. ஒருகாலத்தில் நம்முடைய பொருளாதாரம் உலகின் முக்கியமான நிலையில் இருந்தது. தற்போதைய சூழல் மற்றவர்கள் நம்மைப் பார்த்து சிரிக்கும் நிலைக்கு வந்திருக்கிறது’’ என்றார்.

பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டா ட்விட்டரில் எழுப்பியிருந்த கேள்விகள் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, `ஜே.பி.நட்டா யார்? அவர் என்ன என்னுடைய ஆசிரியரா? அவருக்கு நான் ஏன் பதிலளிக்க வேண்டும்? என் பதிலை நான் நட்டு மக்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன். விவசாயிகளுக்கு என்ன நடக்கிறது என்ற யதார்த்தம் தெரியும். ராகுல்காந்தி என்ன செய்கிறார் என்பது அனைத்து விவசாயிகளுக்கும் தெரியும். எனக்கு மனதைரியம் இருக்கிறது. நான் நரேந்திர மோடியைப் பார்த்தோ அல்லது மற்ற யாரையும் பார்த்து அஞ்சவில்லை. என்னை யாராலும் தொட முடியாது. வேண்டுமானால், அவர்களால் என்னைச் சுட முடியும். நான் ஒரு தேசபக்தன். இந்த நாட்டை பாதுகாப்பதே எனது தர்மம். நான் அவர்களைவிட வெறி பிடித்தவன்" என்று பதிலளித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு