Published:Updated:

``நரேந்திர மோடியைக் கண்டு எனக்கு பயமில்லை..!" - சீறிய ராகுல் காந்தி

ராகுல் காந்தி - மோடி

``நரேந்திர மோடியும், அமித் ஷாவும் ஜனநாயகத்துக்கு எதிராக என்ன செய்தாலும், நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில்தான் நிற்போம்'' என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.

``நரேந்திர மோடியைக் கண்டு எனக்கு பயமில்லை..!" - சீறிய ராகுல் காந்தி

``நரேந்திர மோடியும், அமித் ஷாவும் ஜனநாயகத்துக்கு எதிராக என்ன செய்தாலும், நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில்தான் நிற்போம்'' என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
ராகுல் காந்தி - மோடி

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திவரும் நிலையில், அதைக் கண்டித்து டெல்லி பகுதிகளில் காங்கிரஸ் எம்.பி-க்கள் மற்றும் தொண்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி, டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு கட்டடத்தில் செயல்பட்டு வரும், யங் இந்தியா அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்திருப்பது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ராகுல் காந்தி, சோனியா காந்தி
ராகுல் காந்தி, சோனியா காந்தி

இந்த நிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கின் தற்போதைய விசாரணை குறித்து நாடாளுமன்றத்தின் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, ``நேஷனல் ஹெரால்டு ஒரு மிரட்டல் முயற்சி. நரேந்திர மோடியும், அமித் ஷாவும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால் அமைதியாகி விடுவோம் என்று நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் அமைதியாக மாட்டோம். நரேந்திர மோடியும், அமித் ஷாவும் ஜனநாயகத்துக்கு எதிராக என்ன செய்தாலும், நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில்தான் நிற்போம். மோடியைக் கண்டு எனக்கு பயமில்லை... நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கும், அமைதியைப் பேணுவதற்கும் காங்கிரஸ் தனது கடமைகளைச் செய்யும்" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!