Published:Updated:

`உலகில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு பேச வேண்டும்' - ராகுல்மீது மத்திய அமைச்சர் சாடல்

ராகுல் காந்தி - மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ( ட்விட்டர் )

``ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியில் பொருளாதார மந்தநிலை என்னவாக இருந்தது, தற்போது நாட்டில் என்னவாக இருக்கிறது." - மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, வரும் செப்டம்பர் 7 -ம் தேதி அன்று கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரை மக்களை நேரில் சந்திக்கும்விதமாக, பாரத் ஜோடோ யாத்திரையைத் தொடங்குகிறார். இந்த நிலையில் டெல்லியில் நேற்று பேரணி ஒன்றில் கலந்துகொண்டார்.

அந்தப் பேரணியில் விலைவாசி உயர்வு மற்றும் வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக பாஜக-வை விமர்சித்த ராகுல் காந்தி, ``இந்தியாவில் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் குறித்த அச்சம் அதிகரித்துவருகிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இதன் காரணமாக நாட்டில் வெறுப்பும் அதிகரித்துவருகிறது. இத்தகைய அச்சம் மற்றும் வெறுப்பு காரணமாக, நாட்டில் இரண்டு தொழிலதிபர்கள் மட்டுமே பயனடைகிறார்கள்" என விமர்சித்திருந்தார்.

ராகுல் காந்தியிடமிருந்து இத்தகைய கருத்துகள் வெளிவரவே, பதிலுக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியம் ராகுல் காந்தியை நேற்றுக் கடுமையாகச் சாடியிருக்கிறார்.

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

இது குறித்து பிரகலாத் ஜோஷி, ``ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியில் பொருளாதார மந்தநிலை என்னவாக இருந்தது, தற்போது நாட்டில் என்னவாக இருக்கிறது... மந்தநிலையைக் குறைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது... உலகத்துக்கும், இந்தியாவுக்கும் இடையேயுள்ள வித்தியாசம் என்ன... உக்ரைன் - ரஷ்யா போருக்குப் பிறகு உலகில் என்ன நடக்கிறது, இந்தியாவில் என்ன பேசப்படுகிறது என்பதையெல்லாம் தெரிந்துகொண்டு ராகுல் காந்தி பேச வேண்டும்" எனக் கூறினார்.