Published:Updated:

``பொருளாதார நெருக்கடி, வேலையில்லா திண்டாட்டத்தால் இந்தியா பேரழிவை நோக்கி நகர்கிறது!" - ராகுல் காந்தி

ராகுல் காந்தி

``உங்கள் எல்லோருக்கும் தெரியும் தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லாம் மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் நான் திரும்பிச் செல்வேன்." - ராகுல் காந்தி

``பொருளாதார நெருக்கடி, வேலையில்லா திண்டாட்டத்தால் இந்தியா பேரழிவை நோக்கி நகர்கிறது!" - ராகுல் காந்தி

``உங்கள் எல்லோருக்கும் தெரியும் தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லாம் மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் நான் திரும்பிச் செல்வேன்." - ராகுல் காந்தி

Published:Updated:
ராகுல் காந்தி

குமரியில் பாரத் ஜோடோ யாத்திரையைத் தொடங்கிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, ``உங்கள் எல்லோருக்கும் தெரியும் தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லாம் மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் நான் திரும்பிச் செல்வேன். தமிழ்நாட்டோடு எனக்கு இருக்கும் தொடர்பு உங்களுக்குத் தெரியும். இங்கு வரும்போது மகிழ்ச்சியோடு நான் செல்வேன். அருமையான இயற்கை சூழலில் மூன்று கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு எதற்காக காங்கிரஸ் கட்சிக்கும் மக்களுக்கும் தேசத்தை ஒற்றுமைப்படுத்தும் பயணம் தேவைப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது. நாட்டில் இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் தேசத்தை ஒற்றுமைப்படுத்தத் தேவை இருப்பதை மனமார விரும்புகிறார்கள். தேசத்தை ஒற்றுமைப்படுத்த உணர்வு தேவைப்படுவதால்தான் இந்த பாதயாத்திரை நடத்தப்படுகிறது.

நமக்கு முன்னால் காற்றில் அசைந்தாடும் தேசியக்கொடியைப் பார்க்கும்போதெல்லாம் அதன் மாட்சிமைக்காகவும், மகிமைக்காகவும் வாழ்த்தி வணங்க வேண்டும் என நினைக்கிறோம். சிலர் இந்தக் கொடியில் இருக்கும் சக்கரத்தைப் பார்த்து சாதாரண துணி என எண்ணலாம். இது மூவர்ணக் கொடியும், சக்கரமும், துணியும் மட்டுமல்ல. அதைவிட மேலானது. இந்தக் கொடி நம் கைகளுக்கு மிகச் சாதாரணமாக வந்துவிடவில்லை. கொடுக்கப்படவும் இல்லை, அன்பளிப்பாகப் பெறவும் இல்லை. இந்திய மக்களால் மீட்டெடுக்கப்பட்டு வெல்லப்பட்ட கொடியிது.

``பொருளாதார நெருக்கடி, வேலையில்லா திண்டாட்டத்தால் இந்தியா பேரழிவை நோக்கி நகர்கிறது!" - ராகுல் காந்தி

இந்தக் கொடி இந்தியாவில் வாழும் ஒவ்வொரு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கொடியாகும். இந்தக் கொடி இந்தியாவில் வாழும் ஒவ்வொரு மதத்தையும், பேசப்படும் ஒவ்வொரு மொழியையும், ஒவ்வொரு மாநிலத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இது ஒரு நபருக்கான கொடி அல்ல. ஒவ்வொரு குடிமக்களுக்கான கொடி. ஒரு மாநிலத்துக்குச் சொந்தமான கொடி அல்ல, இந்தியாவுக்கான கொடி. ஒரு மதம், ஒரு மாநிலம், ஒரு மொழி, ஒரு சாதிக்குச் சொந்தமான கொடி அல்ல. ஒவ்வொரு குடிமகனுக்கும் மக்களுக்குமான கொடி. இந்தக் கொடி நாட்டின் அடையாளம், இது இந்திய மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கிறது.

நாட்டில் ஒவ்வொரு இந்தியனுக்கும் வாழக்கூடிய உரிமையை உறுதிப்படுத்துகிறது. தேச மக்கள் விரும்பும் மொழி, கலாசாரத்தை கொண்டாடும் உரிமையை இது தந்திருக்கிறது. இன்று இந்தக் கொடி தாக்குதலுக்கும், அச்சுறுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியா என்பது எல்லோர்மீதும் திணிக்கப்பட்ட தனி தத்துவம் அல்ல. நாட்டின் ஒட்டுமொத்த உருவகம் இந்தக் கொடி. இந்தியா என்ற நிறுவனம் கொடியையும், இந்தியா தத்துவத்தையும், சட்டத்தையும் பாதுகாக்க வேண்டும். இந்தியாவின் குரல் பாதுகாக்க வேண்டும். ஒவ்வொரு ஜனநாயக நிறுவனங்களும் ஆர்.எஸ்.எஸ். பிஜேபி-யால் அச்சுறுத்தப்படுகிறது. இது அவர்களின் தனிப்பட்ட உரிமை என நினைக்கிறார்கள்.

``பொருளாதார நெருக்கடி, வேலையில்லா திண்டாட்டத்தால் இந்தியா பேரழிவை நோக்கி நகர்கிறது!" - ராகுல் காந்தி

தனிப்பட்ட முறையில் அவர்கள் நாட்டின், மாநிலத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியும் என நினைக்கிறார்கள். எதிர்க்கட்சிகளை சி.பி.ஐ, வருமானவரித்துறை, வருவாய் புலனாய்வுத்துறை மூலம் மிரட்டப் பார்க்கிறார்கள். இந்தியர்களைப் பற்றி அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. இந்திய மக்கள் எதற்கும் பயப்படமாட்டார்கள் என அவர்களுக்குத் தெரியவில்லை. எத்தனை மணி நேரம் அடைத்து வைத்து கேள்வி கேட்கிறார்கள் என்பது பற்றிக் கவலைப்படமாட்டோம்.

எங்களை முடக்கவோ, அச்சுறுத்தவோ முடியாது. பா.ஜ.க நாட்டை மதம், மொழியின் மூலம் பிளக்கலாம் என நினைக்கிறது. அவர்களால் ஒரு காலமும் தேசத்தைப் பிளக்க முடியாது. இந்த நாடு எப்போதும் ஒற்றுமையாகத்தான் இருக்கும். வரலாற்றில் இல்லாத பொருளாதார நெருக்கடி, வேலையில்லா திண்டாட்டம் மூலம் பேரழிவை நோக்கி இந்தியா நகர்ந்துகொண்டிருக்கிறது. துரதிஷ்டவசமாக ஊடகங்கள் வாய் மூடி மௌனமாக இருக்கின்றன. வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு பற்றிப் பேச மாட்டார்கள். அவர்கள் பிரதமரின் முகத்தை மட்டும்தான் காண்பிப்பார்கள். பா.ஜ.க அரசு திட்டமிட்டு விவசாயிகளை, கூலித் தொழிலாளிகளை, ஏழைகளை நசுக்கி வருகிறது.

``பொருளாதார நெருக்கடி, வேலையில்லா திண்டாட்டத்தால் இந்தியா பேரழிவை நோக்கி நகர்கிறது!" - ராகுல் காந்தி

குறிப்பிட்ட பெரும் தொழிலதிபர்கள் நாட்டின் பொருளாதாரத்தைக் கையில் வைத்திருக்கிறார்கள். துறைமுகம், விமான நிலையம், நிலக்கரி சுரங்கம், மின்சாரம் தயாரிப்பது என அனைத்தும் சில தொழிலதிபர்கள் கையில் சிக்கிக்கொண்டிருக்கின்றன. அவர்கள் இல்லாமல் பிரதமரால் அரசியல்ரீதியாக ஒரு நாள்கூட உயிர்வாழ முடியாது. தொழிலதிபர்கள் ஊடகத்தைக் கையில் வைத்துக்கொண்டு பிரதமரின் முகம் தொலைக்காட்சியில் இருப்பதைப் பார்த்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு வேண்டிய திட்டங்களை நிறைவேற்றுவதில் பிரதமர் குறியாக உள்ளார். ஜி.எஸ்.டி, பண மதிப்பிழப்பு, விவசாயிகளுக்கு எதிரான திட்டங்கள் எல்லாம் தொழிலதிபர்களின் பணத்தைப் பாதுகாக்கச் செய்வதற்கான நடவடிக்கைதான். ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு இருந்த அணுகுமுறைதான் பா.ஜ.க அரசுக்கும் உள்ளது. இந்தியாவைப் பிரித்து, இந்தியர்களை மோத விடுவார்கள். அவர்கள் மோதும்போது அவர்களின் பணத்தை எடுங்கள் என்பதுதான் இவர்களின் கொள்ளை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
``பொருளாதார நெருக்கடி, வேலையில்லா திண்டாட்டத்தால் இந்தியா பேரழிவை நோக்கி நகர்கிறது!" - ராகுல் காந்தி

சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பல வேலை வாய்ப்பை உருவாக்கின. விவசாய வேளாண் தொழில் பல தொழிலாளர்களை உருவாக்கின. இன்று சிறு குறு தொழில் இல்லாமல் போனது. விவசாயிகள் உயிர்வாழ முடியாத நிலையில் உள்ளனர். இதனால் புதிய வேலை வாய்ப்பை உருவாக்க முடியாத நிலை உள்ளது.

விலைவாசியால் இதுவரை வரலாற்றில் இல்லாத மோசமான காலகட்டத்தில் தள்ளப்பட்டிருக்கிறோம். எனவே இந்தியர்களை ஒற்றுமைப்படுத்தும் அவசியம் ஏற்பட்டுள்ளது. அதுதான் நான் தொடங்கியிருக்கும் பாரத் ஜோடோ யாத்திரை. அதன் மூலம் மக்களின் கோரிக்கைகளை, உணர்வுகளை, கேட்க முடியும். மக்களின் ஏக்கங்களையும், ஆசைகளையும் பா.ஜ.க போல நசுக்கவும், குரல்வளையை நெரிக்கவும் விரும்பவில்லை. இந்திய மக்களின் ஞானத்தைக் கேட்க விரும்புகிறேன். மீண்டும் ஒருமுறை உங்களைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

``பொருளாதார நெருக்கடி, வேலையில்லா திண்டாட்டத்தால் இந்தியா பேரழிவை நோக்கி நகர்கிறது!" - ராகுல் காந்தி

அற்புதமான மாநிலத்துக்கு வந்தது மகிழ்ச்சி. இங்கு வந்து வாழ்த்திய என் சகோதரர், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உங்களில் பலரை இந்த யாத்திரையில் சந்திக்க விரும்புகிறேன். நடைப்பயணம் தொடங்கும்போது உங்கள் அன்பைப் பெறுவேன் என நம்புகிறேன். தேசியக்கொடியை வணங்குவது மட்டும் அல்ல. அதன் தத்துவம், கொள்கையையும், எதற்காக உருவாக்கப்பட்டதோ அதைப் போராடிக் காப்பாற்ற வேண்டும்" என்றார்.