Published:Updated:

பில்கிஸ் பானோ வழக்கு: ``பிரதமரே உங்கள் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமேயில்லை!" - ராகுல் சாடல்

ராகுல் காந்தி - மோடி

15 ஆண்டுகளாகத் தண்டனை அனுபவித்து வந்த 11 பேரும், தண்டனைக் காலம் முடியும் முன்பே நேற்று விடுதலையாகியிருப்பது பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினரைப் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

குஜராத் மாநிலம், கோத்ராவில் கடந்த 2002-ம் ஆண்டு பில்கிஸ் பானோ என்ற கர்ப்பிணி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து 2004-ல் இந்தச் சம்பவத்தின் குற்றவாளிகள் 11 பேர் கைதுசெய்யப்பட்டு, 2008-ல் அவர்களுக்கு ஆயுள்தண்டனையும் வழங்கப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோ - Bilkis Bano
பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோ - Bilkis Bano

இந்த நிலையில் 15 ஆண்டுகளாகத் தண்டனை அனுபவித்து வந்த 11 பேரும், தண்டனைக் காலம் முடியும் முன்பே நேற்று விடுதலையாகியிருப்பது பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினரைப் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் தங்கள் கண்டனங்களை பதிவுசெய்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சித்திருக்கிறார்.

` ராகுல் விமர்சனம்
` ராகுல் விமர்சனம்

இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ``5 மாத கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்து 3 வயது சிறுமியைக் கொன்றவர்கள் `அஸாதி கா அம்ரித் மஹோத்சவ்'-ன் போது விடுவிக்கப்பட்டனர். இதன்மூலம், பெண்கள் அதிகாரம் பற்றி பேசுபவர்களிடமிருந்து, நாட்டின் பெண்களுக்கு என்ன செய்தி செல்கிறது. பிரதமரே உங்களின் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தை இந்த முழு நாடும் பார்த்துவருகிறது" என இந்தியில் ட்வீட் செய்திருக்கிறார்.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் பில்கிஸ் பானோ குடும்பத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தை உட்பட மொத்தம் 7 பேர் கொலைசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.