Published:Updated:

``எரிபொருள்களின் 68% வரி மத்திய அரசுக்குத்தான்; ஆனாலும்...” - பிரதமர் மோடியை விமர்சித்த ராகுல்

ராகுல் காந்தி - நரேந்திர மோடி

எரிபொருள் விலையேற்றம், நிலக்கரி, ஆக்சிஜன் பற்றாக்குறை ஆகிய பிரச்னைகளுக்கு மாநில அரசுகள் மீதே பிரதமர் மோடி பழிபோடுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

``எரிபொருள்களின் 68% வரி மத்திய அரசுக்குத்தான்; ஆனாலும்...” - பிரதமர் மோடியை விமர்சித்த ராகுல்

எரிபொருள் விலையேற்றம், நிலக்கரி, ஆக்சிஜன் பற்றாக்குறை ஆகிய பிரச்னைகளுக்கு மாநில அரசுகள் மீதே பிரதமர் மோடி பழிபோடுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

Published:Updated:
ராகுல் காந்தி - நரேந்திர மோடி

இந்தியாவில் பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் சாதாரண மக்கள் மிகவும் சிரமப்பட்டுவருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மாநில முதலமைசர்களுடன் நேற்று கொரோனா குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ''தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைக்காததே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் காரணம். கடந்த நவம்பர் மாதத்தில் மத்திய அரசு கலால் வரியைக் குறைத்தது. ஆனால் சில மாநிலங்கள் மத்திய அரசின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்கவில்லை'' என்றார்.

பிரதமர் மோடியின் இந்தக் கருத்துக்கு பல்வேறு தலைவர்களும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், ``எரிபொருள் விலையேற்றம், நிலக்கரி பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு மாநில அரசுகளே காரணம் எனப் பிரதமர் மோடி கூறுகிறார். மொத்த எரிபொருள் வரிகளில் 68% வரியை மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது. ஆனால், பிரதமர் மோடி இது குறித்து பொறுப்பான பதில்களைக் கூற மறுக்கிறார். மேலும் மோடியின் கூட்டாட்சித் தத்துவம் என்பது மாநிலங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் வற்புறுத்தும் வகையில் உள்ளது'' எனப் பதிவிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism