Published:Updated:

``ராகுல் கொள்கை அரசியல் பேசுகிறார், கோட்சேவின் வாரிசுகளுக்குக் கசக்கத்தான் செய்யும்!" - ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் - ராகுல் காந்தி

``ராகுல் காந்தியின் பேச்சு இந்தியாவில் பூகம்பத்தை இன்றைக்கு உருவாக்கிவருகிறது. அவர் தேர்தல் அரசியலை, கட்சி அரசியலைப் பேசவில்லை. கொள்கை அரசியலைப் பேசுகிறார்." - முதல்வர் ஸ்டாலின்

``ராகுல் கொள்கை அரசியல் பேசுகிறார், கோட்சேவின் வாரிசுகளுக்குக் கசக்கத்தான் செய்யும்!" - ஸ்டாலின்

``ராகுல் காந்தியின் பேச்சு இந்தியாவில் பூகம்பத்தை இன்றைக்கு உருவாக்கிவருகிறது. அவர் தேர்தல் அரசியலை, கட்சி அரசியலைப் பேசவில்லை. கொள்கை அரசியலைப் பேசுகிறார்." - முதல்வர் ஸ்டாலின்

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின் - ராகுல் காந்தி

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, கடந்த செப்டம்பர் முதல் கன்னியாகுமரியிலிருந்து `பாரத் ஜோடோ யாத்திரை' மூலம் நாட்டு மக்களை நேரில் சந்தித்துவருகிறார். காஷ்மீர் வரையிலான இந்த யாத்திரையில் 100 நாள்களைக் கடந்துவிட்ட ராகுல் காந்தி கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் எனப் பல மாநிலங்களைக் கடந்துவிட்டார். இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி கொள்கை அரசியலைப் பேசிவருவதாகவும், அதனால்தான் அவரைச் சிலர் எதிர்க்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின் - `மாமனிதர் நேரு' புத்தக வெளியீட்டு விழா
முதல்வர் ஸ்டாலின் - `மாமனிதர் நேரு' புத்தக வெளியீட்டு விழா

சென்னையில் நேற்று நடைபெற்ற ஆ.கோபண்ணா எழுதிய `மாமனிதர் நேரு' எனும் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஸ்டாலின், ``ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம், ஒரே கலாசாரம், ஒரே பண்பாடு, ஒற்றைத் தன்மை, ஒற்றைச் சட்டம் ஆகிய அனைத்துக்கும் எதிராக இருந்தவர் நேரு. மதத்தை சமையலறையில் அடைத்துவிடாதீர்கள். இதைச் சாப்பிடலாம், இதைச் சாப்பிடக் கூடாது, யாரைத் தொடலாம், யாரைத் தொடக்கூடாது என்றெல்லாம் சொல்லி மலினப்படுத்திவிடாதீர்கள் என்று சொன்னவர் நேரு.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ச்சியாக மூடிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, அவைதான் நவீன இந்தியாவின் கோயில்கள் எனச் சொல்லி உருவாக்கிய பிரதமர் நேரு உயர்ந்து நிற்கிறார். தமிழ்நாட்டுக்கு இத்தனை ஆண்டுக்காலம் கழித்து பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் தேவைப்படுவதுபோல, இந்தியாவுக்கு காந்தியடிகளும் நேருவும் தேவைப்படுகிறார்கள். கூட்டாட்சியை, மாநில சுயாட்சியை, மதச்சார்பின்மையை, சகோதரத்துவத்தை, சமத்துவத்தை, சமதர்மத்தை, சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு இவர்கள் தேவைப்படுகிறார்கள்.

பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல்
பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல்
ட்விட்டர்

அந்த வகையில்தான், ஒற்றுமை நடைப்பயணத்தை நம்முடைய அருமை சகோதரர் ராகுல் காந்தி நடத்திவருகிறார். ராகுல் காந்தியின் பேச்சு இந்தியாவில் பூகம்பத்தை இன்றைக்கு உருவாக்கிவருகிறது. அவர் தேர்தல் அரசியலை, கட்சி அரசியலைப் பேசவில்லை. கொள்கை அரசியலைப் பேசுகிறார். அதனால்தான் இன்றைக்கு ஒரு சிலரால் கடுமையாக எதிர்க்கப்படுகிறார். அவருடைய பேச்சுகள் சில நேரங்களில் ஜவஹர்லால் நேரு பேசுவதைப்போல இருக்கின்றன. நேருவின் வாரிசு அப்படிப் பேசாமல் இருந்தால்தான் ஆச்சர்யம். கோட்சேவின் வாரிசுகளுக்கு மகாத்மா காந்தியின் நேருவின் வாரிசுகளின் பேச்சுகளைக் கேட்டால் கசக்கத்தான் செய்யும்" என்று கூறினார்.