Published:Updated:

ஜோடோ யாத்திரை: ``ராகுல்தான் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மீறினார்" - காங்கிரஸுக்கு சிஆர்பிஎஃப் பதில்

பாதுகாப்புப் படை

``அனைத்துப் பாதுகாப்பு வழிகாட்டுதல்களும் கண்டிப்புடன் பின்பற்றப்பட்டன. போதுமான அளவு பாதுகாப்புப் பணியாளர்கள் பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்." - CRPF

ஜோடோ யாத்திரை: ``ராகுல்தான் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மீறினார்" - காங்கிரஸுக்கு சிஆர்பிஎஃப் பதில்

``அனைத்துப் பாதுகாப்பு வழிகாட்டுதல்களும் கண்டிப்புடன் பின்பற்றப்பட்டன. போதுமான அளவு பாதுகாப்புப் பணியாளர்கள் பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்." - CRPF

Published:Updated:
பாதுகாப்புப் படை

ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்றுவரும் பாரத் ஜோடோ யாத்திரை, கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. பல மாநிலங்களைக் கடந்து, கடந்த 24-ம் தேதி டெல்லியில் நுழைந்தது. இந்த நிலையில், "பாரத் ஜோடோ யாத்திரை சனிக்கிழமை டெல்லிக்குள் நுழைந்ததைத் தொடர்ந்து பல சந்தர்ப்பங்களில் ராகுல் காந்தியின் பாதுகாப்பில் சமரசம் செய்யப்பட்டிருக்கிறது.

பாரத் ஜோடோ யாத்திரை
பாரத் ஜோடோ யாத்திரை

அதிகரிக்கும் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதிலும், Z+ பாதுகாப்பு ஒதுக்கப்பட்டிருக்கும் ராகுல் காந்தியைச் சுற்றிப் பாதுகாப்பு வீரர்கள் வருவதைப் பராமரிப்பதிலும், முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால், காங்கிரஸ் தொண்டர்களும், ராகுல் காந்தியுடன் நடந்து செல்பவர்களும் பாதுகாப்பு சுற்றுச்சுவரை அமைக்கவேண்டியிருந்தது" என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் குற்றம்சாட்டி கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் CRPF (மத்திய ரிசர்வ் போலீஸ் படை) அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்திருக்கிறது. இது தொடர்பாக CRPF அளித்திருக்கும் பதிலில், ``ராகுல் காந்தி வருகையின்போது தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை சிஆர்பிஎஃப், மாநில காவல்துறை மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிகளுடன் ஒருங்கிணைந்து, அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, சிறப்பாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அனைத்துப் பாதுகாப்பு வழிகாட்டுதல்களும் கண்டிப்புடன் பின்பற்றப்பட்டன. போதுமான அளவு பாதுகாப்புப் பணியாளர்கள் பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு வீரர்கள்
பாதுகாப்பு வீரர்கள்

டிசம்பர் 24, 2022-க்கான பாரத் ஜோடோ யாத்திரையின்போது, ராகுல் காந்தி பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மீறினார். பல சந்தர்ப்பங்களில், ராகுல் காந்தியின் தரப்பில் வகுக்கப்பட்ட வழிகாட்டுதல்களை மீறுவதும் கவனிக்கப்பட்டது. இந்த உண்மை அவருக்கு அவ்வப்போது சுட்டிக்காட்டப்படுகிறது. உதாரணமாக, 2020 முதல், 113 விதிமீறல்கள் கவனிக்கப்பட்டு முறையாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளன” என்று விளக்கமளித்திருக்கிறது.