Published:Updated:

ராகுல் - பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேச்சு... மோதிக்கொள்ளும் பாஜக, காங்கிரஸ்!

ராகுல் - பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் மீது வெறுப்புப் பேச்சு பேசியதாகக் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மதுரையில் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்ரா நடைப்பயணம் மேற்கொண்டுவரும் ராகுல் காந்தி பல்வேறு குழுக்களைச் சந்தித்துவருகிறார். இந்த நிலையில், கன்னியாகுமரியில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா உள்ளிட்ட பாதிரியார்களை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி சந்தித்து உரையாடினார். அந்த உரையாடலில், கடவுள் குறித்து பேசியது விவாத பொருளானது. இதற்கு பா.ஜ.க தற்போது கண்டனம் தெரிவித்திருக்கிறது.

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா
பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா

இது தொடர்பாக ட்விட்டரில் பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ.க-வின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா தனது ட்விட்டர் பக்கத்தில், "கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய பேச்சால் சிறை சென்ற பாதிரியாரை காங்கிரஸ் தலைவர் சந்தித்ததன் நோக்கம் என்ன? இந்துக்களை அச்சுறுத்தி, பாரத் மாதாவைப் பற்றி தகாத வார்த்தைப் பேசிய ஜார்ஜ் பொன்னையா போன்ற ஒருவரை பாரத் ஜோடோ யாத்ராவின் போஸ்டர் பாய் ஆக்கிவிட்டார் ராகுல்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
காங்கிரஸ் - பாஜக
காங்கிரஸ் - பாஜக

பா.ஜ.க-வின் விமர்சனத்துக்கு காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டரில், ``பாரத் ஜோடோ யாத்ராவின் வெற்றிகரமான தொடக்கத்தைப் பார்த்தபிறகு, மிகவும் அவநம்பிக்கையடைந்த பா.ஜ.க-வின் வழக்கமான செயல்தான் இது. மகாத்மா காந்தியின் கொலைக்கும், நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம். கல்புர்கி, கவுரி லங்கேஷ் போன்றவர்களின் கொலைகளுக்கும் காரணமானவர்கள் தான் தேச நலன்குறித்த கேள்விகளை எழுப்புகிறார்கள்! என்ன ஒரு மோசமான நகைச்சுவை! பாரத் ஜோடோ யாத்ராவின் உணர்வைக் கெடுக்கும் இத்தகைய முயற்சிகள் படுதோல்வி அடையும். !" எனப் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் மீது வெறுப்புப் பேச்சு பேசியதாகக் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மதுரையில் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.