Published:Updated:

`இதற்காகத்தான் எழுந்தேன்..!'- பிரதமரின் `டியூப்லைட்' விமர்சனத்துக்கு ராகுல் காந்தி பதிலடி

ராகுல், மோடி
ராகுல், மோடி

டியூப்லைட் விமர்சனத்துக்கு ஒரு நாள் தாமதமாக ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

மக்களவையில் குடியரைசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பிரதமர் மோடி நேற்று பேசினார். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பேசிய பிரதமரின் உரையில், ``குடியுரிமைச் சட்டம் இந்தியர்களைப் பிரித்துப் பார்க்கவில்லை. நாங்கள் இஸ்லாமிய மக்களை இந்தியர்களாகப் பார்க்கிறோம். ஆனால், எதிர்க்கட்சிகள் அவர்களை மதக் கண்ணோட்டத்துடன் பார்க்கின்றன'' என்று குற்றம் சாட்டினார். பேச்சின் போது, தங்கள் அரசின் சாதனைகள் குறித்து பிரதமர் பட்டியலிட்டுக் கொண்டிருந்தார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

டெல்லியில் வேலை வாய்ப்பைப் பெருக்காத காரணத்தினால் இளைஞர்கள் பிரதமர் மோடியை சவுக்கால் அடிப்பார்கள் என்று ராகுல் காந்தி பேசியிருந்ததை சுட்டிக் காட்டிப் பேசிய மோடி, இளைஞர்கள் தன்னை சவுக்கால் அடித்தால் அதைத் தாங்கிக் கொள்ளுமளவுக்குத் தன் உடலை வலுப்படுத்தி வருவதாகப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது. குறுக்கிட்ட ராகுல் காந்தி ஏதோ பேச முயன்றார்.

உடனே... பிரதமர் மோடி, நான் சுமார் 40 நிமிடங்கள் பேசிக் கொண்டிருக்கிறேன். சிலர் இப்போதுதான் மின்சாரம் வந்தது போல திடீரென்று துள்ளுகின்றனர். சில டியூப்லைட்டுகளும் இப்படித்தான் வேலை செய்யும் என்று மறைமுகமாக எதையோ குறிப்பிட்டார். இதனால், அவையில் சிரிப்பலை எழுந்து அடங்கியது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்த நிலையில், பிரதமரின் பேச்சுக்கு ஒரு நாள் தாமதமாக ராகுல் காந்தி இன்று பதிலடி கொடுத்துள்ளார். அதில், ``பிரதமராக இருப்பவர்களுக்குச் சில வரைமுறைகள் உள்ளன. அதன்படிதான் நடக்க வேண்டும். நம் பிரதமரிடத்தில் அத்தகைய தகுதிகள் இல்லை. வயநாட்டில் மருத்துவக் கல்லூரி அமைப்பது தொடர்பாக கேள்வியெழுப்ப எழுந்தேன்'' என்று கூறியுள்ளார்.

பின் செல்ல